பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. பிரம்பே நீ வாழி!

டவுளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஐயா ...என்ன அப்படி விழிக்கிறீர்கள்?. முதலில் புறக் கண்ணே மூடித் தொலையுங்கள்: இப்போது மனக் கண்ணைத் திறந்து பாருங்கள்! ஓ, ஒளவைப் பாட்டி தரிசனம் தருகிறாளா? உங்களுடைய அணுசக்தி மூளையில் ஓங்கித் தட்டி அவள் அந்தப் பாட்டைச் சொல்லித் தருகிறாளா? ஆஹா வேடிக்கையான மனிதர் ஐயா நீங்கள்!

அரி, சித்தரி, நான, மோனு, பாடம் கற்றுக் கொண்ட ‘பழங்கதை’ யிலிருந்து சூயெஸ் கால்வாயை விட்டு அப்பொழுதுதான் கப்பலில் இறங்கியவர் மாதிரி ஆங்கிலம் பேசும் ‘புதுக் கதை’ வரை நடந்த சரித்திரத்தின் ஏடுகளை எப்படி அதற்குள் நீங்களெல்லாம் மறந்திருப்பீர்கள்!

உங்கள் மறதி என்றும் சிரஞ்சீவியாக வாழட்டும்!—ஆனால் இந்தத் தெய்வத்தின் மறதி கூட சிரஞ்சீவி வரம் பெறாமலேயே சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகின்றது. அன்று தொட்டு இன்று வரை இந்தத் தெய்வ பரம்பரைக்கென அமல் நடத்துவதாகப் ‘பயங்காட்டப்படும்’ உத்தரவுகள் ரொம்ப ரொம்பக் குறைவு.

அதோ, ‘படம் கண்ட தெய்வம்' பேசுகிறது’ கேளுங்கள்: “ராமநாதபுரம் மந்திரி என்கிட்டே