பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146


இது. ஆமாம், காலம் ஒரு செப்பிடுவித்தைக் காரன். அவ்ன் செய்யும் வித்தைகள் வியப்பூட் டும்; வினேயம் தரும், விவேகமும் ஊட்டவல்லன. இது மாதிரியேதான் காலம். காலத்தின் முப்பெரும் பிரிவுகளுக்குள் அடங்கவல்லது உலகமும் உலகத் தின் வாழ்வும். நேற்று, இன்று, நாளை என்ற முப் பெருந்தத்துவங்களைக் கையாளாத சிந்தனை யாளர்கள் அபூர்வம். அவர்களுக்குக் காலம் செய்து காட்டுகிற செப்பிடுவித்தைகள் ஒன்றல்ல, இரண் டல்ல, காலத்தின் பிரதிபலிப்புக் கண்ணுடியாகச் சரித்திரம் சித்திரிக்கப்படும். காலத்துக்கு ஆட் பட்டு நிலவும் சக்தியை மீறும் சக்தி உலகிலே எந்த ஒரு ஜீவனுக்குமே இல்லை எனலாம். ஆனல், காலத்தை ஆளும் சக்திபடைத்ததாக எங்களூர்ப் பஞ்சாயத்துப் போர்டு கடிகாரம், எங்களுர் சின்னச்சாமி வீட்டுத் தலைக்கோழி, எங்கள் வீட்டு முற்றத்து வெய்யில் ஆகிய இவை மூன்றும் அடிக் கடி ஜம்பம் அடித்துக் கொள்ளுகின்றன. - பொழுது புலர்ந்தது யாம் செய்தவத்தால்: என்று பாடினர் தேசீயமகாகவி. கடிகாரம் ஒடு முன் ஒடு: என்ருர் புரட்சிக்கவியரசர் . பொழுது புலர்ந்ததென்ருல், அப்போது காலமணி ஆறு என்று பொருள். பிள்ளையைப் பள்ளிக்கு அனுப் பும் தாய் கடிகாரத்தைச் சுட்டி, அத்துணை சுறு சுறுப்புடன் ஓடச்சொல்கிருள். இவ்விரு காவிய நயங்களும் காலத்தின் கடமைக்கு எடுத்துக்காட்டுக்