பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156


"தமிழ்வாணன் ஆளுர். முத்தையா-கண்ணதாசன் ஆனர். பெயர் வெறும் பெயர் மட்டுமல்ல; அது ஒரு சரித்திர வாழ்க்கைக்கு உரிய ஒரு வாழ்க்கை அது. சொல்லப்போல்ை உலக உருண்டையே ஒரு பெயர்ப்பட்டியலின் விசித்திரத் தொகுதியே யாகும். பெயர் வைக்கப்படாத ஜீவன் ஏது? ஜடம் ஏது? நோய்தான் ஏது? இப்போது உங்களுக்கு ஒரு புதிய பெயர் உலகினைக் காட்டப் போகிறேன். இந்த உலகில் தமிழகத்தின் எழுத்தாளர்களின் பெயர்களை நீங்கள் மீண்டும் சந்திக்கப் போகின்றீர்கள். 1961ஆம் ஆண்டில் வெளியிட்ட 'உமா பொங் கல் மலருக்கென நான் தயாரித்த புதுமுறைப் பட் டியல். இந்த விசித்திரப் பட்டியலை சம்பந்தப் பட் டவர்கள் மெல்லியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஓர் எச்சரிக்கையையும் கொடுத் திருந்தேன். இப்பட்டியலின் பெயர்கள், பெயர் களின் அழகு, பெயர்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும் பாங்கு, அப்பெயர்களின் பின்னே தொனிக்கும் மெல்லிய நகைச்சுவை-முதலிய பல் வேறு தரப்பட்ட சுவைக் கணுக்களையும் நீங்கள் ர்சிக்கக் கூடும். அப்புறம் நீங்களும் என்னுடன் சேர்ந்து கொண்டு, "ஆமாம் பெயரில் எல்லாம் இருக்கிறது என்ற நடைமுறை உண்மையை நயந்துரைப்பீர்கள். - - கரி அடியுங்கள் :