பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



21


தமிழ்ப் பண்பாட்டின் சாத்திரத்துக்கு ஒரு புதிய நோக்கமாகவும் விளங்குகிறது இத்திருநாள்.

கதிர்க் கோமானின் பாதைக்கு ஒரு திரும்புமுனை இப்பொங்கல் புது தினம்.

அதே போல, தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வுப் பாதைக்கு ஒரு மூலைத்திருப்பம் இத் தமிழர் திரு நாள்.

உழைப்பிற்குப் பொங்கல் வைத்துக் கொண்டாடும் சுதினமும் இதுவேயல்லவா?

பொங்கலுக்கு முன்னும் பின்னுமாக அந்தந்த நாட்டுப் பழக்கப்படி பலபல துறைகளில் ஒரிரு விழாக்கள் நடைபெறுகின்றன! போகிப் பண்டிகை கனுப் பொங்கல், மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு- இப்படிப்பட்ட சிறு பெயர்களைக் கொண்ட ஒரு பெரிய-பொது விழா இப் பொங்கல் திருநாள்.

இப்பொங்கல் விழாவை நாம் நம் அன்பர்களுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பகிர்ந்து கொண்டு அன்பால், பண்பால், பாசத்தால் மகிழ நமக்குக் கை கொடுக்கின்றன பொங்கல் வாழ்த்துக்கள்!

இந்தப் பொங்கலின் உயிர்ப்பாக சூரியன், பூமி, ஏர், உழவர் போன்ற பற்பல் சக்திகள் இயங்குகின்றன. இதயத்தின் தீபமதை இயங்கவைக்கும் செஞ்சுடர்ச் செல்வனையும், பொற்பு நிறைந்தத. த. க-2