பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

 வாழ்க்கை என்ற சொல்லடுக்கைச் சுற்றி ஒரு இரும்பு முள் வேலியை அமைத்துக்கொண்டுள்ளது. முள்ளில் வாழ்க்கைத் தத்துவம் ஒடுங்கி விடுகிறது. முள் நிறைந்த ரோஜாவிலிருந்துதானே உள்ளம் கொள்ளை கொள்ளும் நறுமணம் புறப்படுகிறது! அதுதான், கஷ்டங்களுக்குப் பிறகே வாழ்வில் ஆனந்தம் என்பதைக் காட்டுகிறது.

'அவரவர்களின் கண்களைக் கொண்டே அவரவர்களை அறியலாம். முட்செடிகளிலே திராட்சைகளையும் முட்பூண்டுகளிலே அத்திப் பழங்களையும் பறிக்க முடியாது!'

இயேசுவின் உள்ளம் பேசுகிறது. இப்படி. ஆனாலும் இத்தனை பிரக்யாதி பெற்ற முள் நம் காலில் தைக்கும்போது 'முள்ளே, நீ அடியோடு வீழ்க!' என்று சபிக்கத் தோன்றுகிறது.

—★—