பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தரிசிக்க முடிந்தது. சிரிக்கச் சிரிக்கப் பேசி என் கைவளையல் தொட்டார்...? என்ற பாட்டை அப்போது அவள் மறந்துவிட்டவரை நான் பிழைத்தேன்...!

‘லோகோ பின்ன ருசி’ என்னும் பழமொழி சிரிப்பவர்களையும், அந்தச் சிரிப்பை ரசிப்பவர்களையும் பொறுத்தமட்டில் மிகவும் பொருந்தும்.

அறிமுகமான நண்பர்களை வழியில் சந்திக்க நேரிட்டால் முதலில் ‘வணக்கம்’ சொல்லி, பின் அதைத் தொடர்ந்து லேசாக ‘ஸ்மைலிங்’ ஒன்றையும் பரிமாறிக்கொள்வளுவதுடன் நம் குசலப் பிரசனத்தை முடித்துக்கொள்ளுகிறோம். நட்பின் பண்பாட்டுக்கு முதல்படி புன்னகை.

‘சிரிப்பில் எவ்வளவு அடங்கியிருக்கிறது! மனிதனை முழுதும் அறிந்துகொள்ளுவதற்குரிய திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியனசெய்யத் தகுந்தவன்’ என்கிறார் அறிஞர் சார்லைன்.

உலகத்தில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சிரிப்பதற்கென்றே அவனியில் பிறந்திருப்பதைப் போல, இச்சமயம் தப்பினால் மறுசமயம் வாய்ப்பதரிது என்று அப்படி ஆழ்ந்து அனுபவித்து, ராகம், தானம், பல்லவி முதலிய உபகரணங்களை உள்ளடக்கி ரசிக உள்ளத்துடன் சிரிப்பார்கள். படைப்பின் சிரிப்புக்கு இவர்கள் விதிவிலக்காகலாம்; விதியின் சிரிப்பு இவர்கள் போக்கில் விலக்கு விதியாக-