பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

கும்பட்டாஸ் வெடச் சிரிப்பிற்கும் உள்ள உறவைப் போல.

“அத்தான், காபி சாப்பிடாமல் என்ன இப்படிப் பிரமாதமாக யோசிக்கிறீங்க...! புதுசா தொடர்கதைக்கு ‘ப்ளாட்’ போடுறீங்களா?” - போதைப் புன்னகையும் காந்தச் சிரிப்பும் கை கொட்டிச் சிரித்தன.

அவள் இப்படி என்னைத் ‘தாஜா’ பண்ணுவதில் ஏதோ ‘பிரகாச தந்திரம்’ இருக்க வேண்டுமென்று நானும் நேருவைப்போல யோசனை செய்து அலசி ஆராய்ந்து முடிப்பதற்குள். என் மோனம் பூத்த நிலைகண்டு அவள் கண்கலங்கிவிட்டாள். சரிதான். ‘ஆந்திரப் பிரச்சினைதான்! என்று தணியும் எந்தன் அமிர்தத்தின் பேசரிதாகம்’ என்றேன் சிரித்துக் கொண்டு. அவள் விம்மினாள். என் சிரிப்பும் அவள் அழுகையும் 1:2 விகிதத்தில் வளர்ந்தது. அவள் சிரிக்கச் சிரிக்கப் பேசியதன் விளைவுதானே இன்று என் பணப்பை கண்ணீர்விட்டு எங்கள் குடும்பப்பிரக்சினை ஐ. நா. சபைவரைத் தூது செல்லும் நிலையிலிருக்கிறதென்பதை நான்—அதாவது என் சுயமூளை அறிகிறது. ஆனால் அவள் பிரஸ்தாபித்த நகையை வாங்கித் தருவதாக அரிச்சந்திரன் ஸ்தானத்தில் என்னை நிறுத்தி உறுதி வழங்கினேன் என் பாதி உயிரிடம். என்னை டிசம்பர் பூப்புன்னகையால் தன்வசமாக்கிவிட்டாள். விரும்பிய நகையை அவளிடம் தண்டனிட்டுச் சமர்ப்பித்ததும்தான். அடியேன் நாடிய நகையை அவள் முகத்தில்