பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(33rPC ώ 87 "அவர் மகள் ரேவதிக்குக் கல்யாணமாம். நோட்டிஸ் கொண்டு வந்தார்.” "நல்லா இருக்கட்டும்.” "ராஜகோபாலன், குடும்பத்தப் பத்திக்கவலப்படுற மனுஷன். பொறுப்பான தகப்பன். நல்லாத்தான் இருப்பார்.” "சரி. நான் நல்லா இல்லாட்டா போறேன். விஷயத்தைச் சொல்லு. மாப்பிள்ளை யாராம்?” "எல்லாம் தெரிஞ்ச இடம்தான். திருச்சில பெல்லுல வேலை பார்க்கிற சாரங்கன்தான்.நம்ம மோகனாவைக் கேட்டாங்கல்லா? அவன்தான்.” "அடடே. அந்தப் பையனா. ரொம்ப நல்ல பையனாச்சே." "அதனாலதான் மோகனாவுக்கு நகை போட்டாலுஞ் சரி, போடாட்டாலுஞ் சரி, கட்டிக் கொடுங்கன்னு கேட்டாங்க. இந்த வீட்ல நல்லது நடக்கறதுதான் ஒங்களுக்குப் பிடிக்காதே" பகபதி, மனைவியை ஏறிட்டுப் பார்த்தார். உள்ளறையில் இருந்துதன்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தமகள் மோகனாவைப் பார்த்தார். நடக்கப்போகும் சண்டையை எதிர்பார்த்து ரசனையுடன் நின்றமகனையும், லைட்டுப்போட்டால்மருமகள் திட்டுவாள் என்று பயந்தவள் மாதிரி இருட்டு வீட்டுக்குள் குருட்டுப் பூனை மாதிரி பதுங்கிக் கிடந்த அம்மாவையும், அவள் முழங்காலைப் பிடித்துக் கொண்டிருந்த தங்கை சிவகாமியையும் பார்த்தார். "நான் மட்டும் முடியாதுன்னா சொன்னேன்? தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருக்கேன், சீக்கிரமா முடிஞ்சிடும். ஆறுமாசம் பொறுங்கன்னு சொன்னேன். ஆறு மாசம் பொறுக்க முடியாதவன், நம்ம பொண்ணுகிட்டே ஏதாவது குற்றம் குறை இருந்தால் ஆயுள் முழுதும் பொறுப்பான் என்கிறது என்ன நிச்சயம்?”