பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரிடம் ஸ்கூட்டரை கம்யூனிட்டி ஷெட்டில் விட்டுவிட்டு, பசுபதி படிக்கட்டுகளில் ஏறினார். மூன்றாவது மாடியில் உள்ள குவார்ட்டர்ஸ். - கணவனுடன் சீக்கிரமாகச் சண்டை போடணும் என்று நினைத்தவளாய், அவசரமாகக் கதவைத் திறக்கப்போன காமாட்சி, "அவரே தட்டட்டும் என்று கோபத்தோடு நின்றாள். பகபதி, கதவைத் தட்டினார். “எனக்கென்ன காதா செவிடு? ஒரு தடவ தட்டினா போதாதாக்கும்” என்று சொல்லிக்கொண்டே காமாட்சி கதவைத் திறந்தாள். பகபதி எதுவும் பேசவில்லை. வாஷ்பேசினில் முகத்தைக் கழுவிக் கொண்டார். உள்ளேபோய் ஆடைகளைக் களைந்துவிட்டு, ஒருநாலு முழுவேட்டியைக் கட்டிக்கொண்டு வராந்தாவில் வெறுமையாக இருந்த ஒரு சாப்பாட்டுத் தட்டையும், மனைவியையும், உள்ளே சமையலறையும் மாறி மாறிப் பார்த்தார். காமாட்சியால் தாள முடியவில்லை. என்றாலும் அமைதியாகவே பேச்சைத் துவக்கினாள். "ராஜகோபாலன் வந்திருந்தார்.” "அடடே, அப்படியா. நம்மவீட்டுக்கெல்லாம் சாதாரணமாய் வரமாட்டானே. என்ன விஷயமாம்.?”