பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரிடம் 89 பிளாக்கின் இதர காதுகளுக்குக் கேட்க வேண்டாம் என்று நினைத்தவர்போல், இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஒட்டை ரேடியோவைச் சத்தமாக வைத்துவிட்டு வெளியே நடந்தார். பசுபதிக்கு, உச்சி முதல் உள்ளங்கால் வரை வலித்தது. நெற்றிப் பொட்டைத் தேய்த்து விட்டுக்கொண்டு, எதிரே இருந்த மைதானத்தில் போய் உட்கார்ந்தார். பகபதி, அலவலகத்தில் நேர்மையாக நடப்பவர். கண்டிராக்டர்களுடன் கிசுகிசு பேசி அறியாதவர். இதனால் 'கிககிக பேசிய பெரிய அதிகாரிகளால் முட்டுக்கட்டையாகக் கருதப்பட்டு, ஜீவனில்லாத எலும்புகட்டையாக நடத்தப்பட்டவர்.அவருக்குக் கீழே இருந்தவர்கள் மேலே போய்விட்டார்கள். அவருக்குச் சமமான பொறுப்பில் இருக்கும் இளைஞர்கள் கூட கார்வாங்கிவிட்டார்கள். சிலர், 'நான் வாங்கித் தரேன். நீரு பேசாமக் கையெழுத்து மட்டும் போடும் என்று கூட அவரை அசைத்தார்கள். அவர் அசைந்து கொடுக்கவில்லை. அன்று பகபதிக்கு முக்கியமான வேலை இருந்தது. மனைவியின் நச்சரிப்பில் பத்தாண்டுகளுக்கு முன்பு, சகாய விலையில் ஒரு பிளாட் வாங்கிப் போட்டிருந்தார். அவர் வேலைபார்க்கும் கம்பெனி, வீடு கட்டுவதற்காக ஊழியர்களுக்குக் கடன் கொடுக்க முன்வந்தது. பலர் கட்டிய வீட்டையே இரண்டாவதாகக் கட்டிக் கடன் வாங்கி இருக்கிறார்கள். பசுபதி மீண்டும் மைைவியின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் கடனுக்கு மனுப்போட்டார்.'லேயவுட் அங்கீகாரமானால் கடன் கிடைக்கும். வரைபடங்கள் அடங்கிய ஒரு காகிதக் கட்டுடன், பசுபதி ஸ்கூட்டரில் ஏறினார். முந்தின நாள் நடந்த சண்டைக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலோ அல்லது அவரை அவமானப்படுத்தும் வகையிலோ பார்த்த சக பிளாக் ஆசாமிகளைப் பார்த்தும் பார்க்காதவர்போல் புறப்பட்டவர், நோ என்ட்ரியில்'