பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 க. சமுத்திரம் ஸ்கூட்டரை விட்டு விட்டார். போக்குவரத்து கான்ஸ்டேபிள் நேரிடையாகவே கேட்டுவிட்டார். "நோ என்ட்ரி போர்டு போட்டிருக்கே. பார்க்கலியா?” "பார்க்கல வார்.” "சரி. பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. உங்க பேரு அட்ரிளையச் சொல்லுங்க” பசுபதி, அவரிடம் முகவரியைக் கொடுத்துவிட்டு, லே அவுட்டை அங்கீகரிப்பதற்காக உள்ள அலுவலகம் வந்தார். காகிதக் கட்டைக் கொடுத்து விட்டுத் திரும்பினார். அவரது லே அவுட் பிளான் ஆயிரத்தெட்டு கேள்விக் கணைகளுடன் திரும்பி வந்தது. அதேசமயம், அவரது பிளாட்டுக்கு அருகேயுள்ள பிளாட்காரருடையபிளான்.அங்கீகாரத்துடன் வந்தது. பசுபதியால் தாள முடியவில்லை. 'என்ன உலகம். என்ன மனிதர்கள். சீச்சி அவருக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அந்தப் பாடாவதி ஸ்கூட்டரை விற்றால் என்ன? பிளாட்டையும் விற்றால் என்ன? இரண்டிலேயும் கிடைக்கிற பணத்தில் தங்கச்சிக்கு ஒரு வழி பண்ணிடலாம். ஒரு மாதத்தில், அவர்தங்கை சிவகாமிக்கு, கமாரான இடத்தில் முப்பத்தாயிரம் ரூபாய் விலையில், ஒரு பையன் கிடைத்தான். காமாட்சி, தாலிக்கட்டப்படும்வரை திட்டியதைக் கணக்கில் எடுத்துப் பார்த்தாலும், கல்யாணம் நன்றாகத்தான் நடந்தது. சிவகாமி, கணவன் வீட்டுக்குப் போய்விட்டாள். ஆனால், அவளால் எழுந்த பிரச்சினைகள் போக மறுத்தன. காமாட்சியும் சரி, பிள்ளைகளும் சரி, பசுபதியை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். இப்போதெல்லாம், அவர்