பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரிடம் 9; துணிமணிகளை அவர்தான் துவைத்துக் கொள்ளவேண்டும். மனைவிக்காரி, மனம் போன போக்கில், மஞ்சகடுதாசி கொடுக்கும் அளவிற்கு, பல புடவைகளை இன்ஸ்டால்மெண்டில் வாங்கினாள். பிள்ளைகள் கண்ட கண்ட சினிமாக்களுக்குப் போனார்கள். அவர், இலைமறைவு காய மறைவாகக் கேட்டால், 'அத்தைக்கு நீங்க முப்பதாயிரம் செலவழிக்கும்போது, நாங்க கேவலம் ஒரு இரண்டாயிரம் ரூபாய் செலவளிக்கக்கூடாதா?” என்று பதிலடி கொடுத்தார்கள். ஒரு மாதம் ஓடியது. கணவன் நீட்டிய முப்பது நூறு ரூபாய் நோட்டுக்களை 'இப்பவாவது புத்தி வந்ததே என்கிற மாதிரி காமாட்சி சிரித்துக் கொண்டே வாங்கினாள். அவர் வேலையில், அதற்கு மேலே கூட வாங்கலமாம். பணத்தை வாங்கி வைத்துவிட்டு, முதல் தடவையாக அவருக்கு மோர் கொண்டு வரப்போனாள். இதற்குள் மகன்களும் மகள்களும் அவரை மொய்த்துக் கொண்டார்கள். டி.வி. வாங்கணும். டைனிங் டேபிள் வாங்கணும். ஃபிரிட்ஜ் வாங்கணும். எதிர் வீட்ல வாங்காத சிலதையும் வாங்கணும். பகபதி அமைதியாகப் பேசினார். 'நானும் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன், காமாட்சி. இந்த பணமும் முதல் தவணதான். இன்னும் தருவாங்க” "அய்யோ. மெள்ளபேகங்க. எதிர் வீட்டுக்காரிக்குப் பாம்புக் காது.” "அதுக்கென்ன... நல்லா யோசித்துப் பார்த்தேன். நான் வாங்குற சம்பளத்தையும் நீங்கள் செலவழிக்கிற செலவையும் பார்த்தா.மோகனாவுக்குக் கல்யாணத்துக்காகப் பைசா கூட மிச்சம் பண்ண முடியாது. அதனால வாலண்டியரா ரிட்டையராகிட்டேன். கிராசுவிட்டி பணம் முப்பதாயிரம் ரூபாய் வந்தது. மாதம் முன்னுறு ரூபாய் பென்ஷன் வரும்."