பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரிடம் 93 “வேலையை விட்டாச்சுன்னா குவார்ட்டர்ஸைக் காலி பண்ணிட்டுக் குடிசைக்குப் போக வேண்டியதுதானா?” என்றான் மூத்த மகன் சபாபதி. "பைத்தியக்கார அப்பா இருக்கிற வீட்ல நம்மால இருக்க முடியாது” என்று எங்கோ புறப்படப் போனான் இளைய மகன். "நீங்களே சொல்லுங்கப்பா. முன்னபின்ன யோசிக்காமல் பைத்தியக்காரத்தனமா வேலய விடலாமா?” என்றாள் மோகனா. பகபதியை கைப்பிடித்த காமாட்சி, கணவனை, அங்கேயே உதறினாள். மாறி மாறி உதறினாள். "நீங்க பைத்தியம். பைத்தியம். பைத்தியமேதான். அய்யோ, யாராவது இந்த பைத்தியத்த எங்கேயாவது சேருங்களேன். அய்யோ அய்யய்யோ. காலப்போக்கில் பகபதியின் முகம் விகாரப்பட்டு வந்தது. சாடை மாடையாகவும், நேரடியாகவும், ஏச்சுக்கள், பேச்சுக்கள். மூன்று மாதத்தில், கீழ்ப்பாக்கம் ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அன்று கத்த துவங்கியவர் இன்னும் கத்திக்கொண்டே இருக்கிறார். 'நான் பைத்தியமில்ல. நல்லவன். நல்லவன்.' - குமுதம், 1982 - வாக்கில்

  • *