பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப()ேல வேசம் அந்த அறை குளிர்ச்சியாக இருந்தாலும், உதவி இயக்குநர் (விற்பனை) அருணாசலம் சூடாகத் தோன்றினார். தோள் குலுங்காமல் கழுத்தை மட்டும் பக்கவாட்டில் ஆட்டியபடியே, எதிரே நின்ற இந்திராவை, ஒரு பார்வை பார்த்தார். கன்னங்கரேர் உருவத்துடன் கிடா மீசைத்தனமாக உள்ள 'பாஸை பார்த்து, அவள் பீஸான பல்பானாள். வெறும் வயித்துக்காரியான அவள், பிள்ளைத்தாச்சி போல் இடுப்பைப் பிடித்தபடி நெளிந்தாலும், குனிந்தாலும், அவர் விடவில்லை. "ஏம்மா. நீ சம்பளம் வாங்குறதை மறக்கிறயா..? மேக்கப் போட மறக்கிறியா..? மாத நாவல் படிக்க மறக்கிறியா..? இந்த டெல்க்ஸ் மெஸேஜை மட்டும், ஏம்மா மறந்தே...? இதை எனக்கு தெரியப்படுத்தணுமுன்னு, உனக்கு ஏம்மா தெரியலை. இமிடியட் என்கிற வார்த்தை எதுக்காக போட்டிருக்கான்? இமிடியட்டைப் புரியாட்டா இடியட்டுன்னு தானே அர்த்தம்? ஏ.டி கேக்குறேன் பதில் சொல்லு.” "என்ன ஸார் நீங்க ஏ.டி. வாடின்னு.” "அட நீ ஒருத்தி. நான் என் பதவிய என்ன மாதிரியே கருக்கி சொன்னேன். மீண்டும் சொல்றேன். அவிஸ்டெண்ட் டைரக்டர்னா, உனக்கு இளக்காரமா போச்சு. போம்மா. போய் சீக்கிரமா டெலக்ஸ் செய்திக்கு பர்ட்டிகுலர்ஸ் எடும்மா." காபி கலர் புடவையும், ஜாக்கெட்டும் போட்டு, இரண்டு கைகளிலும் அதே கலரில் வளையல்களை அடுக்கடுக்காகப் போட்டிருந்த இந்திரா, வெளியே போனபோது -