பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப()ேல வேசம் 95 பலவேசம் உள்ளே வந்தார். அவரும் ஒரு அளயிஸ்டெண்ட் டைரக்டர்தான். அந்தக் கம்பெனியில் பர்சேஸ் பிரிவைக் கவனிப்பவர். இவருக்கு, அவரோ. அவருக்கு, இவரோ. ராசா இல்லை. இருவருமே தனிக்காட்டு ராசாக்கள். எசமான் எம்.டி. டில்லியில், பலவேசத்தை உற்று உற்றுப் பார்த்த அருணாசலம், ஆவேசப்பட்டு பேசினார். 'ஏய்யா. லீவுல போனிரே... ஒரு வார்த்தை எங்கிட்ட சொன்னிரா? இவ்வளவுக்கும், நீரு லீவ்ல போனால், உங்க வேலையையும் நான்தான் கவனிக்கணும். அங்குமிங்குமா கேட்ட செய்தியைவச்சு நானே உங்ககிட்டேகேட்டேன். அப்போவும்போகல போகலன்னு புழுகினிரு. கடைசியில டெல்லிக்காரன் சொன்னான். நீரு லீவ்ல போயிட்டதாயும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே லீவ் லெட்டரை அனுப்பிச்கட்டதாயும். தெளிவா சொன்னான். லீவு சமாச்சாரத்தை மறைக்கிறதுல. என்னய்யா உமக்கு கிடைக்கடப் போவுது..? அருணாசலம், எந்த அளவுக்குத் துடித்தாரோ, அந்த அளவுக்கு நிதானப்பட்டார் பலவேசம். நெற்றியில் விபூதியும், குங்குமமும் அழியாதபடி கைக்குட்டையால், முகத்தை ஒற்றியபடியே, ஒரு குறுஞ்சிரிப்போடும், அதே சமயம், அருணாசலம் பேச்சால் பெரிதும் பாதிக்கப்பட்டவர் போலவும் விளக்கமளித்தார். "அற்ப விஷயத்துக்கெல்லாம் ஏன் தலைவரே இப்படிக் குதிக்கீங்க? போட்ட லீவை கேன்ஸல் செய்யறதுன்னு தீர்மானிச்சேன். அதனால்தான் உங்ககிட்டே அப்படி சொன்னேன். ஆனால், உங்க விஸ்டரு. போயே ஆகணுமுன்னு ஒத்தக் காலுல நின்னாள். அதனாலதான், கடைசி நேரத்துல புறப்பட்டேன். உங்ககிட்டே சொல்ல நினைச்சேன், ஆனா, டெலிபோன் அவுட் ஆப் ஆர்டர். உங்களுக்கு நிதானமே கிடையாது தலைவரே... தாம் துாமுன்னு குதிக்கிறதுதான்,