பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 க. சமுத்திரம் உங்களுக்கு எப்போவும் வேலையாப் போச்சு. உங்களுக்கு ஏற்கெனவே பிளட் பிரஷ்ஷர். இப்படிக் கத்தாதீங்க. நான் பொறுத்துக்குவேன். ஆனால், உங்க ரத்தக் குழாய் பொறுக்காது.” அருணாசலம், தன் மீதே தவறு கண்டவர்போல், பேசாமல், பேப்பர் வெயிட்டை மேஜையில் உருட்டியபோது, பழுத்த ஞானிபோல் தோற்றம் காட்டிய பலவேசம், மெள்ளக் கேட்டார். "தலைவரே. உங்க ஸ்டெனோ இந்திராவை, ஒரு அரை மணி நேரம் தர முடியுமா?" "உம்மஸ்டெனோவுக்கு கண்டபடில்லாம் லீவ் கொடுத்துட்டு, என் ஸ்டெனோவை ஏய்யா இப்படி பிராண்டுறிரு? இப்போ அவள் பிஸி.மத்தியானமாய்பார்க்கலாம்.எங்கய்யாபோறிரு?லீவுல எங்கே போனிரு? உட்கார்ந்து பேகமுய்யா. உட்காருமுய்யா.” "இதோ வந்துடுறேன் தலைவரே.” "எங்க போறிங்க...?" "இதோ இங்கேதான்.பக்கத்துல தான்.பத்தே பத்து நிமிஷம்.” எட்டிப் பிடிக்கப் போன அருணாசலத்தின் கைகளுக்கு இடம் கொடுக்காமலே, பலவேசம், வெளியே வந்தார். மேஜை மேல் உட்கார்ந்த ஒருவனையும், அந்த ஒருவனின் டியன்கேரியரை திறந்து பார்த்த ஒருத்தியையும், மாத நாவல் படித்த மல்லிகாவையும், வாரப் பத்திரிகை படித்த வசந்தாவையும், அரைமணி நேரமாய் டெலிபோன் செய்துகொண்டிருக்கும் அரசனையும், சினேகப்பூர்வமாய் பார்த்தார். அருணாசலம்தான் வெளிப்பட்டாரோ என்று அலறிப் போன ஊழியர்கள், அப்படி வந்தது ஜென்டில்மேன் பலவேசம் என்றதும் நிதானப்பட்டார்கள். ஸ்டெனோ இந்திராவிடம் வந்து கனிவோடு பேசினார். 'ஒங்க தம்பி. ஏர்போர்ட் அதாரிட்டியில் ஏதோ ஒரு வேலைக்கு அப்ளை செய்ததாய் சொன்னது நீங்கதானேம்மா..?”