பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப()ேல வேசம் 97 "ஆமாம், ஸார். ஆமாம். மூணு மாதத்துக்கு முன்னால சொன்னதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே. நீங்கதான் ஸார் எப்படியாவது.” "இல்லாட்டா. வலியக் கேட்பனா..? சரி. பர்டிகுலர்ஸை டைப் அடிச்சுக்கொடு. அப்புறம் ரெண்டே ரெண்டு பக்கம் டைப்பாக்கணும். என் டாட்டர் ஏதோ கான்பரன்ஸ்ல.” "சாயங்காலமா அடிக்கிறேன் வார். இப்போ அது வேலை வச்சிருக்கு” "அவளுக்கு மத்தியானமே வேணுமே. கான்பரன்ஸ் மூணு மணிக்காம், ரெண்டே ரெண்டு பக்கந்தான்." பலவேசம், இந்திராவுடன் தனது அறைக்குள் போனார். ஒரு காகிதக் கத்தையை நிட்டினார், இந்திரா, அழாக்குறையாய் கேட்டாள். “என்ன வார். ரெண்டு பக்கமுன்னு, இருபது பக்கம் தர்ஹீங்க..?” "எழுத்துல இருபது. டைப்புல இரண்டு தான் பரும். ஓ.கே.” பலவேசம் போன ஒரு மணி வரை அருணாசலம், பைல்களுக்குள் அல்லாடினார். திடீரென்று, ஒரு டெலிபோன். இந்திரா வடிகட்டி கொடுத்த போன். “ஹலோ யார் பேகறது. தெரியுதான்னு கேட்டா, எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்? அடடே. சொக்கரா. என்னப்பா. உன் பிரமோஷனுக்கு லஞ்ச் கொடுக்கிறியா..? என்னை ஏம்பா கூப்புடல? என்னது, பலவேசத்துக்கிட்டே, என்கிட்டே சொல்லும்படியா. பல தடவை சொன்னியா..? ஓ.கே. வாரேன். என்ன. பலவேசமும் அங்கே இருக்காரா.” மேஜையில் கையூன்றியபடி எழப்போன அருணாசலம், தொப்பென்று நாற்காலியில் விழுந்தார்.