பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 க. சமுத்திரம் 'எதுக்காக இந்த பலவேசம், என்கிட்டே சொல்லலை? நான் போறதால இவனுக்கு என்ன கஷ்டம்? இப்ப மட்டும் அவன் என் கண்ணுல அகப்பட்டால். கூடாது, கோபப்படக்கூடாது. பிளட் பிரஷ்ஷர் அதிகமாகிவிடும். அதனால லஞ்ச் பார்ட்டிக்குப் போய்ப் பலவேசத்தை திட்டும்படியா ஆகப்படாது. அந்தச் சமயம் பார்த்து, பியூன் வெள்ளைச்சாமி, உள்ளே வந்தான். அருணாசலம், பிடித்துக் கொண்டார். "வாய்யா. வா... பத்து மணி ஆபீசுக்குப் பன்னிரண்டு மணிக்கா வாரே? இந்திரா இங்கே வா. இவனை இன்னிக்கு சஸ்பெண்ட் செய்தாகணும்.” "என் மகனை ஆஸ்பத்திரியிலே சேர்த்துட்டுவர்றேன்வார்.” “மடையா. இதை ஏன் மொதல்ல சொல்லப்படாது? பழையபடியும் பிட்ஸா..?பணம் ஏதும் வேணுமா? இதோ அய்ம்பது போதுமா? டேய். இங்கே வாடா. உங்கப்பானா. இந்த ஜன்னல் திறப்பாரு...? கண்ணாடி ஜன்னலை திறந்து வைக்கணுமுன்னு, ஏண்டா உனக்குத் தெரியலை... முண்டம், முண்டம். முழு முண்டம்.” மத்தியானத்திற்குப் பிறகு, பலவேசம் பீடா வாயோடு, உள்ளே வந்தார். அருணாசலம், அவர் கழுத்தை நோக்கிப் போன கரங்களை முடக்கியபடியே கேட்டார். "எங்கே போயிட்டு வாரீங்க..?" "அதோ அங்கேதான்.” 'ஏய்யா. இப்படி ரகசியமா நடக்கியரு. சொக்கர் கொடுக்கிற லஞ்ச் பற்றி என்கிட்டே சொன்னால் என்னய்யா?” அதுவும், அவன் என்னை வச்சுத்தான், உங்கள கூப்பிட்டிருக்கான். உம்ம சோத்தையா நான் சாப்பிடுவேன்? கடவுளே. கடவுளே. சீ. இப்படியும் ஒரு."