பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப()ேல வேசம் 99 "விஷயம் தெரியாம. இப்படிக் குதிக்கிறீங்களே. தலைவரே, எனக்கும் இருதயத்துல இஸ்க்கிமியா இருக்குதா..? செக்கப்புக்குப் போனேனா. அந்த வழியில சோழா ஹோட்டல பார்த்தேனா. பார்ட்டி ஞாபகம் வந்துட்டு.” "சரி. என்னையும் கூட்டிட்டுப் போறது.” "நினைச்சேன். ஆனால், அங்கே இருக்கிற அயிட்டங்களைப் பார்த்த பிறகு மனசை மாத்திக்கிட்டேன். விஸ்க்கியைப் பார்த்தா விடுவீரா? அப்புறம் உம்ம உடம்பு என்னாகிறது? என்சிஸ்டருக்கு, நான் எப்படி பதில் சொல்றதாம்.? "சரி. சரி. நான் ஒரு உளறு வாயேன். உம்ம வேலையைப் போய்ப் பாரும்.” "நீங்க இப்படி என்னை இன்சல்ட் செய்யுறதாலதான், டில்லிக்காரனும் இன்சல்ட் செய்யுறான். ஆமாம் தலைவரே! "டிரேட்பேர்ல' நம்ம கம்பெனிக்கு ஸ்டால் போடுறோம். நடக்கிறது மெட்ராஸ்ல... நடத்த வேண்டியது நான். ஆனால், டில்லி டைரக்டர் ரமணப்பா, பெங்களுர் அஸிஸ்டெண்ட் டைரக்டர் லிங்கப்பாவை நடத்தும்படி சொல்லியிருக்கான். எல்லாருக்கும் நான் கேவலமாய்ப் போயிட்டேன்.” அருணாசலம், அவருக்குப் பதிலளிக்கவில்லை. டில்லிக்கு டெலிபோனை காவடி எடுக்க வைத்தார். "ஹலோ. டைரக்டர் ஆப் எக்ஸிபிஷனா.. ஸார். நம் பலவேசம், மெட்ராஸ்ல கல்லு மாதிரி இருக்கப்போ, பெங்களுர் லிங்கப்பாவை கூப்புடுறது சரியில்லைன்னு படுதுஸ்ார். அப்புறம் வோகல் மேனுக்கு மரியாதை கிடைக்காது ஸார். அவரை மாதிரியே. இவரும் டிசைன் எக்பர்ட்தான் ஸார். உங்க மேல கன்னடத்துக்கு கன்னடமுன்னு பழி வந்துடப்படாது ஸார். தேங்க் யூ ஸார். தப்பா எடுத்துக்காதீங்க. நானும் ஒத்தாசை செய்யுறேன் 8