பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IX இன்றைய தலைமுறை எழுத்தாளர்களான ஜனநேசன், ப. ஜீவகாருண்யன், டி.ஆர்.ராஜாமணி, தேனி சீருடையான், அல்லி உதயன், ஷாஜகான், தி.க. வேலாயுதம் போன்றவர்கள், நாங்கள் கையாண்ட கருப்பொருளின் இயல்பு மாறாமல், அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, எங்களைவிட சிறப்பாக எழுதி வருகிறார். தலைப்பு கதையான தலைப்பகை போன்ற சிறுகதைகளை எழுதுவதற்கு கன்னியாகுமரிமாவட்டத்தில் சாமிதோப்பில் வசிக்கும் பிரபல தமிழ் அறிஞர் புலவர் பச்சையம்மால் அவர்களே முழுமுதற் காரணம். இலக்கிய பத்திரிகையான ‘சதங்கை ஆசிரியர் வனமாளிகை அவர்களுடன் திரு. பச்சையம்மாலை சந்தித்தபோது வைகுண்டர் எப்படி ஒரு ஆன்மீக போராளியாக விளங்கினார் என்பதை வரலாற்று பூர்வமாக விளக்கினார். வள்ளலாருக்கு முன்பே, ஒரு ஆன்மீக போராளியாக வாழ்ந்த வைகுண்டர் மீது எனக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டது. இதனாலயே, திருவாங்கூர் சமஸ்தான பல்வேறு பிரிவு மக்களின் வாழ்க்கை முறைகளை விளக்கும் தோள்.சீலை போராட்டங்கள் பற்றிய நூல்களையும், ஆங்கில பாதிரிமார்கள் எழுதிய நூல்களையும் கிட்டதட்ட கரைத்துக் குடித்துவிட்டேன். இதன் அடிப்படையில், தோள்சிலை என்று தலைப்பில் நீண்டதொரு நாவல் எழுத திட்டமிட்டு இருக்கிறேன். இதைத்தான் தோழர். அகத்தியலிங்கம் அவர்கள் கோடிகாட்டிருக்கிறார். இந்த சிறுகதைக்கு சில அரிய தகவல்களை தந்த அய்யாவழி இயக்கப்பிரமுகர்மணிபாரதி அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். இந்தத் தொகுப்பில் வரும் இருவேறு கண்கள், நான் அறிந்த ஒரு தாயின் பாச வெளிபாட்டு உளைச்சல்கள். இந்தத் தாய், நமது தாய்மார்களை பொதுமைப்படுத்துகிறாள். நாணமும்,