பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பே, இந்த பழங்கதைகளை பத்திரிகைகளில் இருந்து எடுத்து படித்தபோது, எனக்கே ஒரு ஆச்சரியம் - நான் நல்ல எழுத்தாளன்தான் என்று.பெரியவர்வல்லி க்கண்ணன் அவர்களிடம்கூட, ஒரு தடவை, இந்த வாசிப்பை கட்டிக்காட்டி அண்ணாச்சி அப்போவே நான் நல்ல எழுத்தாளனாகதான் இருந்திருக்கிறேன் என்று சொன்னபோது, அவரும் சந்தேகமில்லாமல் நீங்கள் நல்ல எழுத்தாளர்தான் என்று கூறியதை நினைத்துப் பார்க்கிறேன். பொதுவாக இப்போது எனது கதைகளில் யதார்த்தமான வர்ணணைகளோ, பாத்திரங்களின் உருவப் பதிவுகளோ அதிகமாக இல்லை. இவை இரண்டும் இடம்பெற்ற இந்த பழம்பெரும் கதைகள், என்னுள் வெங்காய வாசனைபோல், ஒரு மண் வாசனையை தோற்றுவிக்கின்றன. இப்படிக் குறிப்பிடுவதால், நான் பாமரத்தனமான கதைகள் எழுதவில்லை என்று பொருளல்ல. அப்படிப்பட்ட ஒரு சில கதைகளை படித்துவிட்டு, தலையிலேயே குட்டிக்கொண்டேன். எந்தத் தொகுப்பிலும் அவை இடம்பெறக் கூடாது என்பதிலும் முனைப்பாக இருக்கிறேன். ஆனாலும், இந்தத் தொகுப்பில் துரக்கலாக தோன்றும் உபதேசங்கள், பாமரதனமானவை அல்ல என்று திடமாக நம்புகிறேன். நாம் எந்த வாசகதளத்தை நினைத்து எழுதுகிறோமோ, அந்த தளத்திற்கேற்பதான், கருப்பொருள் ஒன்றானாலும், உருவமும், மொழிநடையும் தீர்மானிக்கப்படுகின்றன. இது, வலிந்து எழுததாத என்னை போன்ற தோழமை எழுத்தாளர்கள் கு. சின்னப்பபாரதி, டிசெல்வராஜ்,பொன்னிவன், தனுஷ்கோடி ராமசாமி,மேலாண்மை பொன்னுசாமி போன்றோருக்கும் பொருந்தும். எங்களின்