பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII இப்படி விடுப்பட்டுபோன கதைகளை, பழைய இதழ்களில் இருந்து தேடிப்பிடித்து, அவை வேறு தொகுப்புகளில் வந்துள்ளனவா என்பதை சரிப் பார்த்துசேர்த்திருக்கிறேன்.உணர்வு ரீதியாகவும், இந்தத் தொகுப்பிற்கும், இதே மாதிரியான முன்னைய தொகுப்புகளுக்கும், வித்தியாசம் உள்ளது. முன்னைய தொகுப்புகள் அந்தந்த காலக்கட்டங்களில் வெளியானதால், அவை என்னுள், ஒரு யதார்த்த உணர்வை மட்டும் ஏற்படுத்தியதே அன்றி, வரலாற்று உணர்வை ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்தத் தொகுப்பின் நிகழ்வுகளை பின்நோக்கி பார்க்கும்போது, நான் மெய் சிலிர்த்து போகிறேன். இப்போதும், எனது இலக்கிய நோக்கும், போக்கும் மாறுபடவில்லை. ஆனாலும், மொழி நடையும், கதை சொல்லித் தனமும், கட்டமைப்பும் காலத்திற்கேற்ப மாறி உள்ளன. இந்தப் பின்னணியில், இந்த பழைய கதைகளை படிக்கும்போது, என்னை நானே வியந்து கொள்கிறேன். அதே சமயம், சிறிது நிரடலாகவும் உணர்கிறேன். இதே கதைகளை, இப்போது எழுதினால், உள்ளடக்கங்கள் மாறாமல், உருவங்கள் மாறி இருக்கும். இந்த கதைகளில் சில மாற்றங்கள் தேவை என்று நான் நினைத்தாலும், அந்த மாற்றங்களை செய்யவில்லை. ஆங்காங்கே, பழைய கட்டிடத்திற்கு வெள்ளை அடித்ததுபோல, சில மேல் பூச்சிகளை பூசியிருக்கிறேனே தவிர கட்டிடத்தை புதுபிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அதே சமயம், இந்த கட்டிடம் பாழடைந்துபோகவில்லை என்பதிலும், இதில் இன்னும் மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலும் ஒரு ஆறுதல்.