பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை இந்தத்தொகுப்பு உள்ளடக்கிய16 சிறுகதைகளில், தலைப்புக் கதையான தலைப்பாகை தவிர்த்து அனைத்துமே பத்துபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. அதுவும், எழுதப்பட்ட காலத்திற்கு முன்னால், பத்தாண்டு காலத்திற்குள் நடைபெற்ற நிகழ்வுகளை, அனுபவங்களை மையமாகக் கொண்டவை. இந்த வகையில் இந்தத் தொகுப்பு, கடந்த கால மக்கள் வரலாற்றின் இலக்கிய பதிவாகும். தலைப்பாகை, நவீன சிறுகதை என்றாலும், அதுவும் பத்தென்பதாம் நூற்றாண்டில் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் அவல வாழ்க்கையை பதிவு செய்கிறது. இந்த வகையில்தான் எனது அத்தனை சிறுகதைகளும், தமிழ் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் இலக்கிய ஆவணங்களாகபதிவு செய்யப்பட்டிருப்பதாக கருதுகிறேன். இந்தத் தொகுப்பிற்கு ஒரு சிறப்பு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதைகள், இப்போதுதான் நூல் வடிவத்தில் அச்சேருகின்றன. ஏற்கனவே வெளியாகி உள்ள எனது இருபது சிறுகதைத் தொகுப்புகள், 1945-ஆம் ஆண்டில் இருந்து இன்றைய காலக்கட்டம் வரையான, சமூக-அரசியல்-பொருளாதார பதிவுகள்தான். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள், முன்னர் வெளியான தொகுப்புகளில் எப்படியோ விடுப்பட்டு போயின.