பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V அலுவலகங்களை தாண்டினால் சமுத்திரத்தின் பார்வையே தனி, பெண்களை எக்ஸ்ரே கண்களால் ஊடுருவும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், பெண்கள் பார்வையில் சம்பவங்களை பார்ப்பதும், சமூக அநீதிகளை நச்சென்று சாடுவதும், சமுத்திரத்தின் பாணி அல்லவா? கோவலனை மன்னிக்காத கண்ணகியாக பாவப் பாசம் ஊர் நாட்டாண்மையை மீறுகிற நாணமும் பெண்மையும், தன்னை அவளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் அவள் நியாயத்தை அங்கீகரிக்கிற முதல் இல்லாத இரவு - என ஒவ்வொரு கதையும் ஒரு பொறி, பத்தாம் பசலி சமூகப் பார்வையை சுட்டெரிக்க ஊழித்தீயை மூட்டும். முத்தாய்ப்பாய் தலைப்பாகை குமரி மாவட்டத்தில் நடந்த தோள் சீலைப் போராட்டத்தின் தொடக்க அத்தியாயங்களில் ஒன்று. வரலாற்றுச் செய்தி. பெண்கள் மார்சீலை போடவும், ஆண்கள் தலைப்பாகை கட்டவும் உரிமையற்று இருந்த நேரத்தில், முத்துக்குட்டி சாமி கட்டிவிட்ட தலைப்பாகை சுயமரியாதைப்போரில், மனித உரிமைப்போரில், கட்டிய முதல் தலைப்பாகை, இந்தக் கதையை படிக்கும்போது இப்படியும் நடக்குமா என்கிற வியப்பும், இப்படியும் வாழ்ந்ததோமோ என்கிற கொதிப்பும் ஒருங்கே எழும். இந்த தலைப்பாகை சிறுகதை ஒரு நாவலாய் விரியும். விரிய வேண்டும் என்கிற விழைவினை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் மூலம், தம் எழுத்துக்கு இன்று தலைப்பாகை சூட்டும் அவர் மகுடம் சூடிக்கொள்வது நிச்சயம். சமுத்திரம் எழுத்தை பேசிக்கொண்டே இருப்பதைவிட இனி அவர் எழுத்தோடு பேசலாமே!