பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV முட்புதருக்குள் கிடக்கும் குடிசையின் அழகை லயித்து சித்திரம் தீட்டவும், அவனால் முடியும்; குடிசையில் நுழைந்து கருவேலமுட்களும், விஷப் பாம்புகளும் துழ்ந்த அவனது வாழ்வின் கொடுரத்தை சித்தரிக்கவும் முடியும். எப்படிப் பார்க்கிறான் என்கிற கோணமே முக்கியம். சமுத்திரம் எப்போதுமே, பாதிக்கப்பட்டவர் மனோ நிலையில், சம்பவங்களை பார்க்கிறார்; ஒடுக்கப் பட்டவர்கள், பெண்கள், மனோநிலையில் சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரிப்பதே, ஒரு எழுத்துத் தவமாக மேற் கொண்டுள்ளார். இதனால்"இலக்கிய மேட்டிமைக்காரர்களின்" கண்டன விமர்சனக் கணைகள் அவரை துளைத்த போதும், தம் தவத்தை கலைக்காத காரியசித்தரே சமுத்திரம். அவரது எழுத்துக்கு இத்தொகுப்பு தலைப்பாகை. மொத்தம் 16 கதைகள். இதில் ஆறுகதைகள் அலுவலகச் துழலில் உருவானவை. கீழே பணியாற்றும் ஊழியர்கள் யோசனைகளை கேட்பதே பெரும் பாவமாக கருதும் 'நிர்வாகிகள் உள்ளொன்று வைத்து வெளியொன்று பேகம் 'பலவேசங்கள்' சின்ன எழுத்துப்பிழையில் திசைமாறும் வாழ்க்கை; ஒய்வு பெறும் கடைசி நாளில் பயிற்சிக்கு அனுப்பும் இயந்திர நடைமுறை, அடக்கி ஆள எண்ணி சமநிலை பிறழும்.மனிதன், இப்படிப் பலரின் பொய்முகங்களை சமுத்திரம், அழகாய் சித்தரிக்கிறார். எல்லோருக்கும் நல்லவராய் இருப்பவர்கட, ஒருத்தருக்கு வில்லனாக முடியும். ஆனால் அதனை சமூகம் சீக்கிரம் புரிந்து கொள்ளுமா? இப்படி பாதிக்கப்பட்ட சுமதிக்கு சமுத்திரம், பரிவு காட்டுகிறார். மற்றவர்களுக்கு 'அபத்தங்களாய்" தெறிவது, சிலருக்கு நியாயங்களாக இருக்கக்கூடும். அதுதான் வாழ்க்கை