பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுத்திரத்துக்கு தலைப்பாகை க.பொ. அகத்தியலிங்கம் சிறுகதையின் இலக்கணம் எது? விமர்சகர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு அளவுகோலை சிபாரிசு செய்கின்றனர். ஆயினும், ஒவ்வொரு சிறந்த படைப்பும் புதிய அளவுகோலுடன் பிறக்கிறது. ஏனெனில், எழுத்துப்பணி என்பது வெறுமே சொற்களின் கலவை அல்ல. மாறாக உயிர்த் துடிப்பு. ஒவ்வோர் எழுத்துக்கும் உயிர் உண்டு. அது வாசகனோடு உறவாடும், உரையாடும், அதற்கென்று சொந்த முகமும் முகவரியும் உண்டு. இவை இல்லாதவை எழுத்து அல்ல. சமுத்திரம், எழுத்துலகில் தனிமுகத்தோடும், முகவரியோடும் திகழ்கிறவர். சலிக்காத போராளி. அணையாத சமூகக் கோபம். அதுதான் அவர் முகம் முகவரி. அவர் எதிரிகளுக்கு பிடிக்காத அம்சமும், எனக்கு பிடித்த அம்சமும் இவைதான். ஒவ்வோர் எழுத்தாளனும் எதையும் சூனியத்திலிருந்து பிரசவிப்பதில்லை. மாறாக, அவன் வாழ்வில் எதிர்கொள்ளும் மனிதர்கள், சம்பவங்கள், தத்துவங்கள் என ஒவ்வொன்றையும் தனக்கே உரிய கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் கலைஞனின் தனிக்குணம், கோபுரத்தின் மீது நின்று