பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப()ேல வேசம் 103 " என்ன ஸார் இது? அந்தக் காட்டான் அப்படிப் பேசறான். நீங்க பேசாமல் இருக்கீங்களே. பதிலுக்குப் பதில் கொடுத்தா, என்ன ஸ்ார்? ஜென்டில்மேனான. உங்களையே இப்படிப் பேசறான். அப்புறம் நாங்க எம்மாத்திரம்? டில்லிக்கு கம்ப்ளெயிண்ட் செய்யுங்க ഒഡr്.' "பாவம். அவருக்கு வீட்ல என்ன சிரமமோ..? "எல்லாருமே கையெழுத்துப் போட்டு, இப்போ நடந்த சம்பவத்தை டில்லிக்கு எழுதப் போறோம். விசாரணை வரும்போது, நீங்க நடந்ததைச் சொல்லணும். சொல்லுவீங்களா? யாரையுமே மனம் நோகப் பேசாத நீங்க இரண்டுகால் மிருகமாம். டிரெஸ் செய்த நரியாம். அன்றைக்கு என்னடான்னா இவங்கள ஏடின்று வேற கூப்பிட்டுருக்கான். சரி. புகார் எழுதப்போறோம். நடந்ததை சொல்வீங்களா..?” - பலவேசம், அவர்களை கண் நெகிழப் பார்த்தார். அதே கண்களைத் துடைத்துப் பார்த்தார். பிறகு, தரையைப் பார்த்தபடியே தான் பேகவது, அதிகமாய் கேட்கக்கூடாது என்பது போல் பதிலளித்தார். "விட்டுடலாமுன்னு நினைச்சேன். ஏதோ எப்படியோ. அப்புறம் உங்க இஷ்டம்." "இந்தக் காட்டானை விட முடியாது. எழுதத்தான் போறோம். உங்களால நடந்தைநடந்தபடியே,சொல்லமுடியுமா?முடியாதா..? "உங்களுக்கு தெரியாதா...? எனக்குப் பொய் பேசி பழக்கம் இல்லைன்னு. உங்களையும் பார்க்க பாவமாய் இருக்குது. அப்புறம் உங்க இஷ்டம்." கல்கி விடுமுறை மலர் - 1990. o ఈ్మ*