பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 க. சமுத்திரம் "ஓ அதுவா. இந்த சின்ன விஷயத்துக்கா இப்படிக் குதிக்கிறீங்க..?” ‘'எதுய்யா, சின்ன விஷயம். நீரு போயிட்டு நான் போகாட்டால் எம்.டி. என்னைப் பற்றி என்னய்யா நினைப்பார்? இவ்வளவுக்கும், உமக்கு டெலிபோன்ல, எனக்கும் சேர்த்துச்சேதி சொல்லி இருக்காங்க...” "உமக்கு நிதானம் என்கிறதே கிடையாது தலைவரே. முதல்ல சொல்றதைக் கேளுங்க. உடம்பு அசதியா இருக்கேன்னு வீட்டுக்குப் போனேன். நம்ம ஆபீஸ் போன் என்கேஜ்ட் கம்பெனி செக்ரெட்டரி என் வீட்டுக்கு போன் போட்டார். பிளைட் டைமுக்கு முக்கால் மணி நேரந்தான் இருந்துது. உங்களை பிக்கப் செய்தால், எம்டி போகிற பிளேனைக் கூடப் பார்க்க முடியாது. அதனால ரொம்ப ரொம்ப வேதனையோட நான் போனேன். ஆனால், அதுக்குள்ளே எம்.டி. உள்ளே போயிட்டார். கம்மா, கையைத்தான் ஆட்ட முடிஞ்கது.” "யோவ் பலவேசம்! நீ மனுஷன் இல்லய்யா. நிறத்துல வெள்ளையாய் இருந்தாலும், நீ மனசால கரும்பன்றிய்யா... உனக்கும் தெரு நாய்க்கும் வித்தியாசம் கிடையாது. நீதான் இப்படின்னா. உன் வீட்டுக்காரி அதுக்கு மேல. இந்த ஊருக்குப் போயிருக்கார்னு சொல்லாமல், அவுட் ஆப் ஸ்டேஷன்னு சொல்ற அழுகுணியம்மா. ஒருவேளை என்கிட்டே நடந்துக்கிற மாதிரி, அந்தம்மாகிட்டேயும் நடந்தியோ என்னமோ...? நீ உருப்பட மாட்டய்யா. நீ இரண்டு கால் மிருகம். டிரெஸ் செய்த நரி” பலவேசத்தைப் பார்த்துத் துாக்கிய கைகளை ஒன்றுக் கொன்றாய்ப் பிடித்துக் கொண்டு, தனக்கு தானே பயந்தவராய், அருணாசலம் அலுவலகத்தை விட்டே வெளியேறினார். அவர் போனதும், அலுவலக ஊழியர்கள், பலவேசம் அறைக்குள் ஓடிவந்தார்கள். இந்திராவின் சப்தமும், வெள்ளைச்சாமியின் குரலும் அதிகமாய் ஒலித்தன.