பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபத்தங்கள் 105 ஒரு மாதத்திற்கு முன்பு, "இந்தா பாரு வசந்தி! நீ வேலையில் சேர்ந்த மூணு வருஷமாகுது. ஆனால், கமதி, ஒரு மாதத்துல உன்னைவிட, பிரமாதமா டிராப்ட் போடுறாள்" என்று தலைமைக் குமாஸ்தா, நகைச்சுவைக்கும் நடைமுறைக்கும் இடைப்பட்ட குரலி ல் சொன்னபோது ஏற்பட்ட பொறாமை, சிக்கலான பைல்களை மானேஜரே, கமதியிடம் இதைக் கொடுங்கள் என்று சொன்ன போது, ஒரு தாழ்வு மனப்பான்மையாக மாறிவிட்டது. ஆகையால், அதன் வெளிப்பாடாகதான் ஆபீஸ்நேரத்தில்வெளியேபோகாதவள் என்ற ஒழுங்குணர்வு உள்ளவளாக, தன்னைக் காட்டிக் கொள்கிற தோரணையில், வசந்தி, பைலில் எதையோ, ஒன்றைக் கிறுக்கிக் கொண்டிருந்தாள்.ஆனால்,கமதியால், சம்மா இருக்கமுடியவில்லை. "வாங்கக்கா. போயிட்டு வரலாம்.” "கமதி. உனக்குத் தெரியுமோ தெரியாதோ... நான் ஒரு டிஸ்ஸிபிளினேரியன் . கேன்டீன் போறதுக்குன்னே ஒரு டயம் இருக்கு. லஞ்ச் டயம்" "முக்கியமான விஷயம் பேசணும். இல்லன்னா, நான் சுடப்பிடுவேனா அக்கா..?” வசந்தி, அவளுக்கு பதிலளிக்கவில்லை. அலட்சியத்துடன், வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "இவள் என்ன, எதுக்கெடுத்தாலும், அக்கா. அக்கா...'ன்னு சொல்லி மானத்தை வாங்குறாளே. இவளைவிட, ஒரு வயகதானே அதிகம். அதனால, அக்காவாகிவிட முடியுமா?" வசந்தி பொருமிக் கொண்டாள். லஞ்ச் டயம் வந்தது. கமதி வேலையில் கெட்டிக்காரியாக இருந்தாலும், இதர விஷயங்களில், தன்னை நம்பி இருக்கிறாள் என்பதை செக்ஷனில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக, அந்த ஒட்டப் பல்லு தலைமைக் குமாஸ்தாவுக்கு காட்டிக்கொள்ளும் விதத்தில்,"வாரியா போகலாம்.