பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 க. சமுத்திரம் அப்போதே நச்சி எடுத்தியே." என்று சொல்லிக்கொண்டு, சுமதியின் பெருவிரலைப் பிடித்துக்கொண்டு, கேன்டீனுக்குப் போனாள். "என்னமோ. முக்கியமான விஷயமுன்னு சொன்னியே. சொல்லு.” "நம்ம மானேஜரு எப்படிக்கா..?” "தங்கமான மனுஷன். அவரைவிட, ஒரு நல்ல மனுஷன் இருக்க முடியாது." "நான் எதுக்குக் கேட்டன்னா...” என்று கமதி பேச்சை இழுத்தபோது, பியூன் செல்லச்சாமி, ஒரு போண்டாவை வாயில் வைத்துக் கொண்டு வந்தார். அவர் வாய் பேசியதா, போண்டா பேசியதா என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். "இரண்டு லேடீஸ் சேர்ந்துட்டா உலகமே அவர்களுக்கு மறந்துவிடுமாம். மூணு லேடிஸ் சேர்ந்தால்தான் வம்பாம்.” "நீ மூணாவது வந்துட்டே. இனிமேல் வம்புதான்." "நான் என்ன பொண்ணா..? 'ஒன்றுமில்ல செல்லம்... நம்ம மானேஜரு எப்படிப் பட்டவர்னு சுமதி கேட்டாள். நான் எப்படிப்பட்டவர்னு விளக்கப்போனேன். நீ வந்துட்டே, நீயே அவளுக்குச்சொல்லு." செல்லச்சாமி, தனக்கு, வசந்தி கொடுத்திருந்த பொறுப்பை உணர்ந்து அகமகிழ்ந்தான். “என்னம்மா... நீங்க? இந்த மூணுமாசத்தில் மானேஜரு அய்யாவை புரிஞ்சுக்கவியா. தங்கத்தை ஒரு தட்டிலேயும். இவர ஒரு தட்டிலேயும் வச்சா. இவரு இருக்கிற தட்டுதான் கனமா இருக்கும். பத்தரை மாத்துத் தங்கம். இதுக்கு முன்னால.. ஒரு கம்பப் பயல் மானேஜரா இருந்தான். என்னை அவன் பொண்டாட்டி துணிங்கள கூட, ஒவர்டயம் கொடுக்காம துவைக்கச் சொல்லுவான். நைட்ல பத்து மணி வரைக்கும், அவன்