பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபத்தங்கள் 107 குடிக்கிற கிளாஸ்ல, நான்தான் விஸ்கியை ஊத்தணும். என்னைப் பார்த்தவுடனே, அவன் சாராய வாய் 'டா போடும். ஆனால், இந்த மனுஷன், மிஸ்டர் செல்வமுன்னுதான் சொல்லுவார். நானே ஒரு தடவை அவரு வீட்டுக்கு போய், காய்கறி வாங்கிட்டு வரட்டுமான்னுகேட்டேன்.'இனிமேல், வீட்டுப்பக்கம் வராதேன்னு. சிரிச்சுக்கிட்டே அனுப்பிட்டாரு புண்ணியவான் இவரும்மா." பேசிக் களைத்த சொற்பொழிவாளன்போல், செல்லச்சாமி, சோடாச் சாப்பிடப் போய்விட்டார். கமதி, நெற்றியில் வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டு, பரிதாபமாக வசந்தியைப் பார்த்தாள். “எதுக்காக திடீர்னு மானேஜரைப் பத்திக் கேட்டே..?” "கம்மா சொல்லு.” "கொஞ்ச நாளாயே மானேஜரு, என்னை ஒரு மாதிரி பாக்குறாரு.. இன்னைக்கு பைலை என் கையில் கொடுக்கிற சாக்கில், என் உள்ளங்கையை லேசா அழுத்தினாரு... எனக்கு கையும் ஒடல. காலும் ஒடல.” வசந்தி, அவளை ஒரு மாதிரி பார்த்தாள். 'இப்படில்லாம் பழி போடாதே கமதி. அவரு கை தற்செயலாய் பட்டிருக்கும். உதாரணமாய், ஒன்று சொல்றேன் கேளு. ஒரு நாள், பஸ் ஸ்டாப்பில் நின்னேன். சரியான மழை. அந்தப் பக்கமா இவரு வந்தாரு. காளிலே ஏறிக்கோன்னு சொல்லி இருந்தா, ஆபத்துக்கு தோஷமில்லன்னு நானும், அவர் கூடயே போயிருப்பேன். ஆனால், என்ன செய்தாரு தெரியுமா..? காரை விட்டு இறங்கி, என்னிடம் வந்து, நீங்க கார்ல போய் வீட்ல இறங்கிட்டு, வண்டியை அனுப்புங்க... நான் அதுவரைக்கும் இங்கேயே நிக்கிறேன்’னு சொன்னார். இவ்வளவுக்கும் என்வீடு, அவர் போற வழியில்தான் இருக்கு. வழியில் என்னை இறக்கி