பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 க. சமுத்திரம் விடுறதுக்குப் பதிலாய். அவரே வழியில் இறங்கிட்டாரு. அவ்வளவு பெரிய மனுஷன்." சுமதி, சிறிதுநேரம் பேசாமல் இருந்தாள், உடனே வசந்தி, “என்ன... நான் இவ்வளவு சொல்லியும், உனக்கு நம்பிக்கை வரலியா?” என்றாள். "நீங்க சொல்றது சரிதான், அக்கா. நான் இன்டர்வியூக்கு வந்திருந்த போது, கமதி, உன்னைவிட சரோஜ் என்று ஒரு பிரில்லியண்ட் கேர்ல் வந்தாள். அவளை போடணுமுன்னு நினைச்சேன். ஆனால், நீ, உன் வறுமையை சொன்னதும், நோயாளியான உன் அப்பா, உன்னை நம்பி இருக்கதச் சொன்னதும், என் மனக மாறிட்டு... என் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடந்துக்கோன்னு சொன்னாரு...” வசந்திக்கு, பற்றி எறிந்தது. அவள் அருமைத் தங்கை சரோஜிக்கு வேலை கிடைக்காமல் போனதுக்கு, இந்தப்பழிகாரிதான் காரணமா? "என்னக்கா. பேசாமல் இருக்கீங்க..? ஐ அம் ஸாரி. அந்த பெரிய மனிதரை தப்பா புரிஞ்சுக்கிட்டேன். நான்தான் அசடு.” "அவரு தரோ ஜென்டில்மேன். நீ அவரை மயக்காமல் இருந்தால் சரிதான். போவோம் டயம் ஆயிட்டு. நான் டிஸ்பிளினேரியன்." கமதி, துடித்துப் போனாள். அவள் மயக்குறாளாம். நெருப்புக் கட்டிகளை நெஞ்சில் சுமந்துகொண்டவள்போல், அலுவலகத்திற்குள் வந்தாள். எந்த வேலையும். அவளுக்கு ஒடவில்லை. வசந்திக்கே, அவளை அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று தோன்றியது. இதற்கு பிராயச்சித்தமாக, மாலையில் கமதியிடம் அவள் பிரச்சனையை முழுவதுமாகக் கேட்டு, தக்க ஆலோசனைகள் கொடுக்க வேண்டும் என்று மனதுக்குள்ளயே ஒத்திகைப் பேச்சாய் பேசிக்கொண்டாள்.