பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபத்தங்கள் 109 "அசடே... நிலைமை எனக்குப் புரியுது. நாளைக்கு மானேஜரிடம் போய், 'ஸார். நேற்று. வசந்தியிடம். உங்களைப் பத்தி தப்பாச்சொன்னேன். அவள், உங்கள் ஏகபத்தினி விரதத்தை, கார் உதாரணம் மூலம் சொன்னாள். ஐ ஆம் ஸாரி. என்னை உங்க தங்கை மாதிரி நினைத்து, விகற்ப இல்லாமல் தொட்டிட்டிங்க. இதை, நான் பெரிசா நினைத்திட்டேன். உங்களை, என் அண்ணன் மாதிரி நினைச்சு மன்னிப்பு கேட்கிறேன்’னு சொல்லு. ஒருவேளை மானேஜருக்கு, உன்மேல், தப்பான எண்ணம் இருந்தாலும், மாத்திக்கிடுவாரு...” வசந்தி, தனது மனோ ஒத்திகையை முடித்துவிட்டு, கமதியை கனிவோடு பார்த்தபோது, 'சுமதி... நேற்று நீ போட்டிருந்த டிராப்டை பார்த்துட்டு, மானேஜர் ரொம்ப பாராட்டுறாரு. வசந்திக்கும் சொல்லிக் கொடு...” என்றார் தலைமை குமாஸ்தா குத்தலாக, மாலையில், வசந்தி, சுமதியிடம் பேசவில்லை. இவளும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வீட்டிற்கு வந்தகமதிக்கு, அம்மாநினைவுபடுத்தியபிறகுதான், அப்பாவுக்கு மருந்து வாங்கி வரவில்லை என்று தோன்றியது. மருந்துக் கடைக்குப் போகப்போன அவளை, காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்பா சொல்லிவிட்டார். ஆபீசில் ஒரு 'பார்டியில் சாப்பிட்டுவிட்டதாக, சொல்லிவிட்டு, அன்றிரவு அவள் சாப்பிடவில்லை. வசந்தியின் வார்த்தைகள், நெஞ்சிலிருந்து கண்ணுக்கு வந்து, நீராக வடிந்தன. மானேஜர், தற்செயலாக தொட்டிருக்கலாம். நாற்பது வயதான அவர், அவளை மகளாகவோ தங்கையாகவோதான் நினைத்திருப்பார்.கமதி,மானேஜரை தப்பாக எடை போட்டுவிட்டு குற்ற உணர்வுடன் துங்க முயற்சி செய்தாள். ஆனாலும்,கமதி கொடுத்த தீப்புண்வார்த்தைகள், அவள் முயற்சியை முறியடித்துக் கொண்டிருந்தன.