பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烘O க. சமுத்திரம் துாங்கும்போது கடைசியாக நிற்கும் எண்ணம், விழிக்கும்போது முதல் எண்ணமாக வருமாம். சுமதிக்கும், விழிப்பு தட்டியதும் வசந்தியின், 'நீ மயக்காமல் இருந்தால் சரி. என்ற அக்கினித் திராவக வார்த்தைகள் உடலை எரித்தன. அவள், தன்னைத் தானே ஆறுதல் படுத்திக்கொண்டாள். ஆபீஸில் ஸ்டெனோகிராபர் துரை, ஒரு தடவை அவளிடம், 'சுமதி. நீங்க ரொம்ப கவர்ச்சியாக இருக்கீங்க, உங்க... நெற்றியில் சுருண்டு கிடக்கும் முடியை பார்த்தால்..” என்று கன்னாபின்னா என்று பேசியதும், அன்றிலிருந்து, அவனை, தான் ஏறிட்டுப் பார்க்காமல் இருப்பதும், அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவசர அவசரமாகக் குளித்துவிட்டு, முகத்துக்கு பவுடர் போடப் போன கமதி, ஆசையை அடக்கிக் கொண்டாள். நெற்றியில் மோதிரம் போல் படிந்த தலைமுடியை எடுத்து, உச்சியில் ஒரு முடிக்கற்றைக்குள், அது மீளாதவாரு சொருகிக் கொண்டாள். செக்கச் சிவந்த மேனி முழுவதையும், அம்மாவின் பழைய காலத்து புடவையினால் மறைத்துக் கொண்டாள். அலுவலகம் போக வாசலைத் தாண்டிய அவளை,"என்னடி இந்தக் கோலத்துல போறே.” என்று சொன்ன அம்மாவின் வார்த்தைகள் எடுபடவில்லை. வசந்தி சொன்னது வக்கிரமாக இருக்கலாம். அதிலும் ஒரு பாடம் இருக்கே.. மானேஜர், அவளுக்குக் காத்திருப்பதுபோல், அவள் வந்தவுடனே கூப்பிட்டார். அவரை தப்பாகப் புரிந்து கொண்டு விட்டோமே என்ற கூச்சத்தோடு அவள் போனாள். அதை, அவர் நாண்மாக எடுத்துக் கொண்டார். "சுமதி! இப்படிவா. ஒன் டிராப்ட்ல இந்த வாக்கியம் எனக்கு விளங்கல. எப்படின்னு சொல்றீயா?” சுமதி, அந்த அண்ணனிடம் நெருங்கினாள். கையை மேஜை மேல் ஊன்றிக்கொண்டு, லேசாகக் குனிந்து, அவர் கோடிட்ட வாக்கியத்தை படிக்கப் போனாள். திடீரென்று, கை வளையலை,