பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

炒4 க. சமுத்திரம் まま "ஆனால் அவரும் அப்படி...' என்றார், இதுவரை மானேஜரால் எந்தவித பலனும் அடையாத ஒரு குமாஸ்தா. தலைமைக் குமாஸ்தா பதிலடித்தார். "என்னய்யா. அவருமுன்னு இழுக்கியரு. அவ்வளவு பெரிய விஸ்வாமித்ரரையே அந்த மேனகை மயக்கிட்டான்னா, இவரும் மனுஷன்தானே. அடிமேல் அடி அடிச்சா, அம்மியும் நகரும்.” “அவள் டிரஸ்சையும், பவுடரையும் பார்க்கும்போதே, எனக்குத் தெரியும். மானேஜரை மயக்கிடுவான்னு.” என்றான் கமதியிடம் தோல்வி கண்ட துரை. "ஆற்றையும் நம்பலாம். குளத்தையும் நம்பலாம். ஆனால் பதினாறு முழம் கட்டிய பெண்களை நம்பினால்.” என்று விவேக சிந்தாமணி பாட்டைப் பாடினார் பெருமாள். இதைக்கேட்டு,வசந்தியின் பெண்மை சீறியது. முன்னதாகவே சுமதி, தன்னிடம் யோசனை கேட்டாள் என்று அவள் எடுத்துரைக்க ஆயத்தம்செய்தபோது,"இப்பநம்மவசந்தியுந்தான் இருக்காள்.மூணு வருடமாய் வராள். மானேஜரு முகத்தை நிமிர்ந்து பார்த்திருப்பாளா? பெண்ணுன்னா இவள்தான் பெண்.” என்றார்.தலைமைக்குமாஸ்தா. வசந்தி, பெட்டிப் பாம்பாகி விட்டாள். ஒருவேளை சுமதி, ராஜினாமா செய்து அதனால் ஏற்படும் காவியிடத்தில், தன் தங்கையை இப்போதாவது சேர்த்துவிடலாம் என்ற ஒரு முன்னெச்சரிக்கை. "மானேஜரு, இடிஞ்சி போய் உட்கார்ந்திருக்காரு. அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டாரு? விஸ்வாமித்திரரே மயங்கலியா? நீங்கபோய் அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு வாங்க என்று பெருமாள், தலைமைக் குமாஸ்தாவிடம் சொல்ல, அவர் எல்லோரின் ஏகமனதாக தீர்மானத்திற்கு அடிபணியும் ஜனநாயகவாதிபோல் எழுந்தார்.