பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபத்தங்கள் 悠 மாலையில், மருந்துவாங்க பஜாருக்கு வந்த சுமதியை, ஆபீஸ் செளக்கிதார் பார்த்துவிட்டான். இளம் வயதுக்காரன், உள்ளதை உள்ளபடியே சொல்பவன். ஆகையால், அவனை லூஸ்' என்பார்கள். கமதியிடம், அலுவலகப் பேச்சையும், ஏகமனதான தீர்மானத்தையும், கூட்டாமல் குறைக்காமல் சொன்னான். பம்பாயில் மானேஜிங் டைரக்டர் படேசிங், தனக்கு வந்த கடிதத்தின் தலையும் புரியாமல், வாலும் புரியாமல், மீண்டும் அதைப் படித்தார். "அன்புள்ள அய்யா, வணக்கம். தங்கள் அலுவலகத்தின் சென்னைக் கிளையில் குமாஸ்தாவாக வேலை பார்க்கும் சுமதி எழுதுவது. இந்தக் கடிதத்தையே என் ராஜினாமாவாக ஏற்றுக் கொள்ளவும். ராஜினாமாவிற்கான காரணத்தை, நான் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் சொன்னாலும், நீங்கள் நம்பப் போவதில்லை. சில்லறை விஷயங்களில், பெருந்தன்மையாக இருக்கும் ஒருவர்,மகத்தான பாவத்தைசெய்தாலும், அதைநம்ப, இந்த சமுதாயம் மறுக்கிறது. பழியை செளகரியமாக இன்னொருவர் மேல் போட்டு விடுகிறது. குறிப்பிட்ட ஒருவர், இன்னொருவரை அவருக்கும் தனக்கும் உள்ள உறவை வைத்தும், அவரால் தனக்கு கிடைக்கும் நன்மையை வைத்துமே எடை போடுகிறார். ஒரு மனிதனின் செயலைப் பற்றிய தீர்ப்பு, சுயநலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரின் பப்ளிக் ரிலேஷன்' சரியாக இருந்தால், அவர்மாக மருவற்றவராகிறார். சமுதாய நியதிகளையும், குற்றங்களையும், கயபலனை பின்னணியாகக் கொண்ட உறவின்மூலம், நாம், தீர்மானிப்பது வரைக்கும், இந்தச் சமுதாயம் 9