பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

焰 க. சமுத்திரம் உருப்படப் போவதில்லை. "ஒருவன் தொன்னூற்றொன்பது தடவை குற்றம் செய்தாலும், நூறாவது தடவை குற்றம் செய்வான் என்ற அவசியமில்லை" என்றார் காந்திஜி, இதேமாதிரி, ஒருவன் தொன்னுாற்றொன்பது பேருக்கு நன்மை செய்து விட்டதால், அவன் நூறாவது நபருக்கு தீமை செய்ய மாட்டான் என்று நம்புவதும் அபத்தம்; என்ன செய்வது? அபத்தங்களே, சமுதாய விதிகளாகின்றன. "ஒருவர், எல்லோருக்கும் பரோபகாரியாக இருந்து, யார்மீதும் தீய எண்ணம் இல்லாமல் இருக்கலாம். அப்படிப் பட்டவருக்கு ஒரே ஒரு நபர்மீது தீய எண்ணம் வரும்போது, அவர், அதன் ஏகாதிபத்யவாதியாகி விடுகிறார். எல்லோரையும் தீய நோக்கில் அணுகுபவர்கள், தங்கள் வெளிப்பாடுகளை பகிர்ந்தளிக்கிறார்கள். ஆனால், ஒரே ஒருவர்மீது மட்டும் தீய நோக்குகொண்ட ஒருவர், அதை ஒருவரிடமே மொத்தமாக கொடுக்கிறார்; இந்த சாதாரண மனோவிதியை புரியாத மனநோயாளிகள் மத்தியில் நான் பணிபுரிய விரும்பவில்லை.” தங்கள் உண்மையுள்ள, கமதி. தாமரை - மே, 1977