பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள் மேல் நடை வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரிகளின் பெயர்கள், 'மெரிட்'படி வரிசைக் கிரமமாக டைப்பாகி, டைரக்டரும் கையெழுத்துப் போட்டுவிட்டார். நியமன உத்தரவுகளை, ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக அனுப்பியாக வேண்டும். 'டெம்பரரி டைப்பிஸ்ட் மோகனுக்கு, அன்றைக்கு வேறு வேலை அதிகமாக இல்லை. பட்டதாரிகள், கேள்விகளுக்கு எப்படிப் பதிலளித்திருக்கிறார்கள் என்று அறிய, அவனது எஸ்.எஸ்.எல்.சி. மூளை குறுகுறுத்தது. தேர்வுப் பேப்பர்களை, ரேக்கிலிருந்து எடுத்து, புரட்டிக் கொண்டே வந்தான். தானே, அவர்களைவிட நன்றாகப் பதிலளித்திருக்க முடியும் என்ற எண்ணத்திற்கு வந்த அவன் கண்கள், திடீரென்று, ஒரு பரீட்சைப் பேப்பரில் நிலை குத்தி நின்றன. சமதர்மம் வருவதற்கு முன்னால், சமதர்ம மனோபாவம் வரவேண்டும்; ஏழைகளைப் பாராட்டுவதன் மூலம், ஏழ்மையைப் பாராட்டலாகாது என்பன போன்ற வாசகங்கள், அவன் கருத்தைத் தாக்கின. எழுதியவரின் பெயரைப் பார்த்தான். யாரோ ஒரு பெண்.பிரபாவதியாம்.73 மார்க் எடுத்திருந்தாள். அதுதான் டாப் மார்க் திடீரென்று மோகனுக்கு ஒரு சந்தேகம். செலக்ஷன் லிஸ்ட்டில், அவன், பிரபாவதி பெயரை 'டைப் அடித்ததாக நினைவில்லையே? அவசர அவசரமாக, தெரிந்தெடுக்கப்ப பட்டிருப்பவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தான்.