பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 க. சமுத்திரம் பிரபாவதியின் பெயரைக் காணுேம். கேண்டிடேட்டுகளின் மார்க்குகள் பட்டியலைப் பார்த்தான். அதில் பிரபாவதிக்கு, 'ரிட்டன் டெஸ்ட்டில் 73 என்று இருக்க வேண்டிய மார்க் 37 என்று டைப் அடிக்கப்பட்டிருந்தது தவறாக டைப் செய்யப்பட்டு விட்டதால், நேர்முகப்பேட்டியில் 52 மார்க் எடுத்திருந்தபோதிலும், அந்தப் பெண் தேர்வு பெற முடியவில்லை. அவன் செய்த தவறுக்காக ஒரு பெண் அனாவசியமாய் வேலை வாய்ப்பை இழக்க வேண்டுமா? தவறை மேலிடத்தில் ஒத்துக் கொண்டால், முதலில் பயங்கரமாக திட்டுவார்கள். பிறகு, அவன் நேர்மையை புரிந்து கொண்டு, இந்தப் பிரபாவதிக்கும் ஆர்டர் அனுப்புவார்கள். மார்க்பட்டியலை எடுத்துக்கொண்டு,நேராக அளவிஸ்டெண்ட் டைரக்டரிடம் சென்றான். “ளயார்! ஒரு தப்பு நடந்து போச்சு. பிரபாவதி என்கிற கேண்டிடேட்டுக்கு கிடைத்த 73 மார்க் 37 என பதிவாயிட்டுது.” என்று தம் பிடித்துச் சொன்னான். டெலிபோனில் பேசிச்கொண்டே அவனைக் கையமர்த்திய அளவிஸ்டெண்ட் டைரக்டர், சாவகாசமாக டெலிபோனை வைத்துவிட்டு, அவனை இன்னொரு முறை சொல்லச் சொன்னார். அவன் சொன்ன விஷயத்தில், அவர்அதிர்ந்துபோவார்என்று மோகன் நினைத்தான்.கடைசியில், அவன்தான் அதிர்ந்துபோனான். "நடந்தது நடந்துபோச்சு இனிமேல்குட்டையைக்குழப்பாதே" அவன் கெஞ்சினான். "சார். இதுல.ஒருபெண்ணின் எதிர்காலமே அடங்கியிருக்கு" அளவிஸ்டெண்ட் டைரக்டருக்கு, அவனோடு பேசப் பிடிக்கவில்லை. இந்த கிளார்க் அதுவும் டெம்பரரிப் பயல், தன்னுடன் வாதாடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஒருவிதமாக