பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள் மேல் நடை 悠% முறைத்துக்கொண்டே, "லீவ் இட் டு மி. டோண்ட் ரேக் அப். இனிமேல் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசக்கூடாது" என்று சொல்லிவிட்டு, இருக்கையை விட்டு எழுந்தார். ஏன் செக்கப் செய்யவில்லை என்று அவரும் தாளிக்கப்படுவாரே. மோகனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவனுடைய டைப்பிங் தவறு, ஒரு பிரகாசமான பெண்ணிண் வனப்பான வாழ்வுக்கு இடையூறாக இருக்கலாகாது. அவளுக்கு எத்தனை தங்கைகளோ.. எத்தனை ஊதாரி அண்ணன்களோ. அவனுக்கு ஒன்று தெரியும். ஆபீஸர்களில் பெரும்பாலோர் வார்த்தைகளால் 'குலைப்பவர்கள். எழுத்தால் கடிக்கத் தெரியாதவர்கள். முடியாதவர்கள்; ஆகவே, இவர்கள் விட்டுவிடச் சொல்கிறார்களே என்பதற்காக விட்டுவிடாமல், திரும்பத் திரும்ப மன்றாடினால் நிச்சயமாய்ப் பலன் கிடைக்கும் என்று அவன் நம்பினான். நேராக டெபுடி டைரக்டரிடம் போனான். அப்போது அவர், அழகான ஸ்டேனோ ஒருத்தியிடம் டிக்டேட்' செய்து கொண்டிருந்தார். அவனைச் சைகையிலேயே வெளியே நிற்கும்படி கூறினார். இறுதியில், ஸ்டெனோசிரித்துக்கொண்டே வெளியே வந்தாள். மோகன் உள்ளே போனான். டெபுடி டைரக்டரிடம் நடந்ததைச் சொன்னான். உடனே அவர், இப்படி சொன்னார் - 'நடந்ததை சொல்லிட்டே... நடக்கப்போறதை நாங்கள் பார்த்துக்குவோம். டோன்ட் ஒர்ரி. உன் கடமை சொன்னதோடு சரி. லீவ் இட்.” அந்த வார்த்தையை அப்படியே எடுத்துக்கொள்ள மோகனுக்கு மனம் ஒப்பவில்லை. நடந்ததை மாற்ற இவருக்கு அதிகாரம் கிடையாது. இவர் பேச்சின் தோரணையைப் பார்த்தால், இவர், மேல் அதிகாரியிடம் சொல்லபோவதும் இல்லை.