பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 க. சமுத்திரம் மோகன், சர்வ அதிகாரம் கொண்ட இயக்குநர் திரிசங்குவிடம், அவரது ‘பி.ஏ.' இல்லாத சமயத்தில், அறைக்குள் நுழைந்து, விவரம் சொன்னான். அவர், துடித்து போனார். டெபுடி, அவிஸ்டெண்ட் டைரக்டர்களைக் கடப்பிட்டு திரிசங்கு அதட்டினார். அவர்கள் மீது ஏன் ‘கிரேவ் மிஸ் டேக்' செய்ததுக்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு, எழுத்து மூலம் 'மெமோ கொடுத்தார். டெபுடியும், அவிஸ்டெண்டும், ஒரு பிரில்லியண்ட் கெர்லின் பிரகாசமான எதிர்காலம் இருட்டாகப் போவதற்கு வாய்ப்பு ஏற்பட்டதற்காக வருந்தி, பிறகு அப்பாயின்மெண்ட் லிஸ்ட்டை திருத்தி விட்டதாகவும், பிரபாவதிக்கு நியமன உத்தரவு போய்விட்டதாகவும் எழுதிக் கொடுத்தார்கள். அதோடு அவர்கள், "வருத்தத்தை முடிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணமான மோகனை சஸ்யெண்ட்’ செய்ய வேண்டும் என்றும் எழுதினார்கள். மோகன், வேறொரு கேண்டிடேட்டிடம் கமிட்' செய்திருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கேண்டிடேட்டிடம் பணம் வாங்கிக்கொண்டே, பிரபாவதியின் பெயரை வேண்டுமென்றே ஒமிட்' செய்திருக்க வேண்டும் என்றும், லிஸ்ட்டில் தன் பெயர் இருப்பதை அறிந்த, சம்பந்தப்பட்ட கேண்டிடேட், மோகனுக்கு பேசிய தொகையைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என்றும், அப்படிக் கொடுக்காமல் இருப்பது சகஜமென்றும், இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், அந்தக் கேண்டிடேட்டைப் பழிவாங்க நினைத்து, பிரபாவதி என்கிற பெண்ணுக்கு உதவி செய்வதாய் நடிப்பதாகவும், இதை தங்களின் தலா இருபது, பதினைந்து ஆண்டு கால அனுபவங்கள் உணர்த்துவதாகவும் அறிக்கை சமர்ப்பித்தார்கள். விளைவு? டைரக்டர், மோகனை சஸ்பெண்ட் செய்தார். இடிந்துபோன மோகன், அவர்கள் 'டிஸ்மிஸ்’ செய்யுமுன்னாலே, ராஜினாமாக்கடிதத்தைக் கொடுத்துவிட்டான்.