பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள் மேல் நடை 炒 ஒரிரு மாதங்கள், அவனுக்கு ஒன்றும் ஒடவில்லை. ஒருநாள், மோகனின் நண்பன் சந்திரன், அவனை அதட்டினான். பொறியியல் பட்டதாரியானாலும், பழைய எஸ்.எஸ்.எல்.சி. கிளாஸ்மேட்டிடம் பண்போடும் பரிவோடும் பழகுபவன் அவன். "ஏண்டா கழுதை..நேத்து உன் அம்மா சொன்னாங்க. பரூக் அண்ட் புருக் கம்பெனியில் அளவிஸ்டெண்ட் வேலைக்கு இன்டர்வியூக்குப் போனாயாமே? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாது?" "சொன்னால் என்ன செய்திருப்பே.?" "அந்தக் கம்பெனி பெர்ஸனல் ஆபீஸர் என்னுடைய கேர்ல் பிரண்ட். இவனுக்கு வேலை கொடு... இல்லன்னா நான் உன்னைக் கட்டிக்க மாட்டேன். என்று சொன்னால் போதும், ஒப்புக்கொள்வாள். அந்த அளவுக்கு என் மேல் மயக்கம்.” "ஆளை விடுப்பா. நீ வேற ஏதாவது ஏடாகோடமாய்ப் பண்ணி வம்பில மாட்ட வச்சிடாதே. அதோட உன் காதல நீ இப்படி கொச்சப்படுத்தாதே." "கம்மா தமாஷனக்குச் சொன்னேண்டா. நாளைக் காலையில் நாம்ரெண்டுபேரும் அவளைச்சந்திக்கப்போறோம். ஏதோ உன் லக்." மோகன் வேண்டா வெறுப்பாக, நண்பனோடு போனான். சிபாரிசால் வேலையில் சேருவோருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் என்பதும், அது தர்மம் இல்லை என்பதும் அவன் கருத்து. என்றாலும், வயதுக்கு வந்த தங்கைகளையும், வயது முதிர்ந்த தந்தையையும் தாங்கவேண்டிய வறுமையின் அடி, அவனின் உறுதியையும் நகர்த்தியது. "மீட் மிஸ் பிரபாவதி." என்று சந்திரன் அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான்.