பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

炫2 க. சமுத்திரம் அந்தப் பெயரைக் கேட்டுத் திடுக்கிட்டு, மோகன், அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். நாணத்தால், ஏதோ ஒரு சாக்கில் டெலிபோனை விரலால் தட்டிக்கொண்டே, பிரபாவதி மூச்சு விடாமல் பேசினாள். 'அன்னிக்கு நீங்க பீச்சில. சாரி. அன்னிக்கு நீங்க மோகனைப் பற்றிச் சொன்னதும், இன்னைக்குப் பைலைப் பார்த்தேன். இவர் தகுதிகள் பிரில்லியண்ட் தான். ஆனால், இவர் வேலை பார்த்த நிறுவனத்துக்கு இவருடைய கேரக்டர் பற்றி எழுதிக் கேட்டிருந்தோம். லஞ்சக் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆகியிருந்தார்னு எழுதியிருக்காங்க. அதனால..தான்.” 'பிரபா... நீ அப்படிச் சொல்லக்கூடாது. அந்த நிறுவனத்திலே ஒரு பெண்ணுக்கு நியாயமாய் வேலை கிடைக்கிறதுக்காகச் சண்டை போட்டவன் இவன். ஒரு பெண் வாழ்றதுக்காக, தன்னையே அழிக்கக்கிட்டவன் இவன்.” "அந்த நிறுவனம் எவ்வளவு மோசமானதுன்னு எனக்குத் தெரியும். அதனாலதான். எனக்கு அங்கே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்தாலும் சேராமல், இந்த கம்பெனியில சேர்ந்தேன். உங்க நண்பரோட ரிக்கார்ட் இப்படி இருக்கையில். "அப்படிச்சொல்லக்கூடாது. இவன்தான்நம்மமாப்பிள்ளைத் பிரபாவதி, சீரியஸ் மூடில் இருந்ததால் நாணவில்லை; சிரிக்கவில்லை. சிறிது நேரம், பேனாவை எடுத்து வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்தாள். அதன் பிறகு, "ஆல்ரைட். இவரைப் பற்றி வந்திருக்கிற லெட்டரை எடுத்துடறேன். அந்த நிறுவனத்தின் இப்போதைய டைரக்டரை. ஒரு லோஷியல் கேதரிங்ல பார்த்திருக்கேன். அவர்கிட்ட பேசி. நான் அவங்களுக்கு எழுதிய லெட்டரையும் கிழிச்சுப் போட்டுடச் சொல்றேன்.”