பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள் மேல் நடை 123 பிரபாவதி, சொன்னாளே தவிர சீரியஸாகவே இருந்தாள். "ஏன் ஒரு மாதிரி இருக்கிறே..” என்றான் சந்திரன். “ஒன்றுமில்லை. இந்த மாதிரி ரிக்கார்டை "டேம்பர் பண்ற வேலை எனக்குப் புதுக. நான் எழுதின ரிக்காட்டை, நானே அழிக்கணும். ஒரு வேளை, விசயம் வெளிப்பட்டால், இவரை மாதிரிதான் நானும் ஆகணும்.” மோகன்,பிரபாவதியைப் பார்த்தான்.இந்தப்பெண்ணுக்காகச் சண்டை போட்டபோதே, அவளிடம் ஒருவித மானசீகமான அன்பையோ காதலையோ கொண்டிருந்தான். அதே பிரபாவதி, தனக்காக நியாயத்திற்குப் புறம்பான வழியைக் கையாளலமா? கூடாது. ஆபீஸ் நியாயம், உலக தர்மம் ஆகாதுதான். ஆனால், மாற்று உபாயம் கிடைக்கும் வரை, நடைமுறை நியாயம் இருந்தாகவேண்டும்! "மேடம் இவன் நச்சரிப்புத் தாங்க முடியாமல்தான் இங்கே வந்தேன். உண்மையில் எனக்கு எங்கேயும் வேலை செய்ய பிடிக்கல. இவன் அப்பாகிட்ட சொல்லி. நான் உங்கள் மேரேஜை அரேஞ் பண்ணணுமுன்னா, நீங்க எனக்கு வேலை கொடுக்கக் கூடாது. நான் வர்ரேன்." சிரித்துக்கொண்டே பேசியதாக நினைத்துக்கொண்டு, வெளியே வந்தமோகன், நினைவுச்சுமையை ஏற்றிக்கொண்டான்; தொட்டிலாட்டிய தந்தையின் கை இப்போது அவன் கையை எதிர்பார்த்து நிற்கும் கட்டாய நிலையையும், வயது வந்தும் வாய்ப்பில்லாமல் நிற்கும் தங்கைகளின் எதிர்காலமும், அவனை முள்போல் குத்தின. அவர்கள் இருவரையும் அந்த அரையில் தனியாகவிட்டுவிட்டு மோகன் வெளியேறி, முள் மேல் நடப்பதுபோல் நடந்தான். குமுதம் 192.76 • *్మ•