பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XI பாசப்பாவம், நிறைகாக்கும் கற்பு, முதல் இல்லாத இரவு ஆகிய கதைகள், ஒரு நல்ல மனதின் உணர்வு வடிவங்களேயன்றி நடந்தவை அல்ல. ஆனாலும், நடக்கக்கூடியவை. சேரிடம் இப்போதும், நேர்மையான அதிகாரிகள் எதிர்நோக்கும் குடும்ப விவகாரம்தான். அலுவலகப் பணி நேர்மைக்கும், குடும்ப சுயநலத்திற்கும் இடையிலே அல்லாடும் பல அலுவலர்களை நான் பார்த்திருக்கிறேன். இவர்களை பற்றிய முக்கியமான பதிவுதான் இந்த சேரிடம். இந்தக் காலக்கட்டத்தில் சிறுகதைத் தொகுப்பை பெரும் பாலான பதிப்பகங்கள், கையை கடிக்கும் என்பதால் வெளியிடத் தயங்குகின்றன. ஆனால், பெரியவர் திருநாவுகரகம், அவரது அருமை மகன் ராமுவும், இந்த பழைய கதைகளையும் கொண்டுவர திட்டமிட்டது,என் மீது அவர்கள் கொண்ட அளப்பரிய அன்பிற்கும், இலக்கியத்தை வியாபார ரீதியில் அணுகாத சமூக நோக்கிற்கும் எடுத்துக்காட்டு, சிறியன சிந்தியாத பெரியவர் திருநாவுகரசு அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். இந்தத் தொகுப்பிற்கு முன்னுரை கொடுத்திருக்கும் தோழர். அகத்தியலிங்கம் அவர்கள் என்னுடைய நீண்டகால நண்பர். பொதுவாக எங்களை போன்ற ஒத்த கருத்துள்ளவர்களின் உறவு, சமூக அளவில் மட்டுமே நிற்கும். ஆனால், அவருக்கும், எனக்கும் உள்ள உறவு, குடும்ப அளவிலும் நிலைத்து நிற்கிறது. தீக்கதிர் பொறுப்பாசிரியரான தோழர், அகத்தியலிங்கம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அதிகமாக நினைக்கப்படாத அல்லது மறக்கப்பட்ட வீரர்களைப் பற்றி விடுதலைத் தழும்புகள் என்ற அற்புதமான நூலை எழுதியவர். சமூக நீதியை நூல்