பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XII வடிவமாக்கியவர். பல சந்தர்பங்களில் நான் எழுத முற்படும் சிறுகதைகளில் யதார்த்த சிக்கல் வரும்போது, நான் அறிவுரை கேட்கும் ஒரு சில தோழர்களில் இவரும் ஒருவர். மிக சிறந்த முன்னுரையை கொடுத்தற்காக மட்டும் அல்லாமல் என்னைப் பற்றிய அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் எழுத வேண்டும் என்றும் கங்கணம் கட்டியுள்ளேன். இந்த சிறுகதைகளை பிரகரித்த அத்தனை பத்திரிகைகளுக்கும் நன்றியுடையேன். ஒரு சில பத்திரிகைகளின் பெயர்கள் தெரியவில்லை. அந்த முகமறியா பத்திரிகைகளுக்கு என் நன்றி வழக்கம்போல், இந்தத் தொகுப்பிற்கு வாசகர்கள் தங்களது மேலான கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். - க. சமுத்திரம்