பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்கிடம் இல்லாத பொழுது 125 "பயிற்சி கொடுத்தவருக்கே பயிற்சியா..? நல்லா இருக்கே!” "இதுக்குப் பேர்தான் கவர்ன்மென்ட் என்கிறது.” டபிள்யூ. கன்னாவும், ஆர். ராமையாவும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த அறைக்குள் நிறைய பேர் வந்து விட்டார்கள். அசல் எட்டாவது வகுப்பு அறை மாதிரிதான். கரும்பலகை, பிரம்பு, மேப், சாக்பீஸ், முப்பது வயக முன்கோபி. ஆனாலும், ஒரு சின்ன வித்தியாசம். மாணவர்கள் பகுதியில், பெஞ்சுகளுக்குப் பதிலாக ரப்பர் மெத்தை நாற்காலிகள். தூங்குவதற்கு வசதியான சன்மைக்கா மேஜைகள். இந்த அறைக்குள் ஏற்கெனவே பத்துப் பதினைந்து பேர் இருந்தார்கள். உள்ளே நுழைந்த ராமையாவை, டபிள்யூ. கன்னா கையைப் பிடித்து இழுத்து, ஓர் இடத்தைக் காட்டி,"உட்காரலாம்" என்றார். உட்காரப் போன ராமையாவோ, கடைசி வரிசையில் ஒதுக்குப்புறமாய் இருந்த ஒருவரைப் பார்த்துவிட்டார். அடஅட. கே.என். சீனிவாசனா? அப்பாடா..? ராமையா, கே.என்.எஸ். பக்கத்தில் உட்கார்ந்தார். துரங்கிக் கொண்டிருந்தவரை உசுப்பினார். இருவரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஏதோ பேசினார்கள். இதற்கிடையே முன்கோபி போல் தோன்றிய எதிர்வரிசை ஒற்றை மனிதர், கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்தார். பிறகு, இவர்களுக்கு எழுந்து நின்று பேச வேண்டிய அவசியம் இல்லை என்பதுபோல், மேஜைக்கு அப்பால் உள்ள ஆசிரியர் நாற்காலி யில் உட்கார்ந்தார். அறிமுகத்தை பீடிகையாக்கினார். “என் பெயர் சுரேஷ்சிங். இந்த பயிற்சி நிலையத்தில் அசிஸ்டெண்ட் புரொபவர். உங்களுக்கு கோர்ஸ் டைரக்டர். தயவுசெய்து உங்களை அறிமுகம் செய்து கொள்ளலாமா?