பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 க. சமுத்திரம் அறிமுகங்கள் அரங்கேறின. வலது பக்க முன்வரிசையில், அருணாச்சல் பிரதேச நசாரிக், இடது பக்க முன்வரிசையில் நாகாலாந்து வசோல், இரண்டாவது வரிசையில் மராட்டிய மாநில மிஸஸ் ஜோஷி, ஆந்திர கிருஷ்ணாராவ், கன்னட பாட்டில், கேரள குஞ்சுதன் நாயர், மேற்கு வங்காள குப்தா, 'டில்லியின் செல்வர் எஸ்.பி.வர்மா, மத்திய பிறதேச பார்ஜன், பீஹார் சத்பதி - இப்படி பல்வேறு மாநில அதிகாரிகள். இப்போது போதகர் சுரேஷ்சிங் - அதுதான் கோர்ஸ் டைரக்டர், முகத்தை உம்மாக்கி, வாயைக் கோணலாக்கியபடியே புத்திமதி சொன்னார். "நீங்க எல்லாம் சீனியர்அதிகாரிகள்.வயதிலும் சீனியர்கள். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் பயிற்சி நிஜமாவே சீரியஸ்ான பயிற்சி. இதை யாரும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாய் நினைக்கக்கூடாது. அதனால்தான் சொல்றேன் வீ ஆர் டெட் சீரியஸ்." சுரேஷ்சிங், மேஜையை அடித்தபடியே, தம் பேச்கக்குத் 'அடிக்குறிப்பு செய்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார். 'இந்த டில்லியில், எங்க தங்கப் போறோமோன்’னு கவலைப்பட வேண்டாம். இங்கேயே ஹாஸ்டல் இருக்குது. ஆளுக்கு ஒரு ரூம். தின வாடகை ஐந்து ரூபாய்தான். எஸ். லேடி. அண்ட் ஜென்டில்மென். ஐந்தே ஐந்துதான். டோண்ட் ஒர்ரி. இப்போ நிர்வாக இயல் என்ன என்பது பற்றி விளக்கப் போகிறேன். நிர்வாகம் என்பது இம்பெர்ஸனல். அப்ஜெக்டிவ். அதே சமயம், பெர்சனல். சப்ஜெக்டிவ்.” கரேஷ்சிங், பேசிக்கொண்டே போனபோது, மிஸஸ் ஜோஷி சந்தேகம் கேட்டு, டம்பப் பையைத் துாக்கியபடியே எழுந்தாள். சுரேஷ்சிங், ரொம்பவும் சந்தோஷப்பட்டார். "இந்த மேடம் நல்லா கவனிக்கிறாங்க. சந்தேகம்தானே, அறிவின் திறவுகோல். எஸ். ப்ளீஸ் மேடம்.”