பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்கிடம் இல்லாத பொழுது 127 "ரூம் வாடகை ரூபாய் அஞ்சுன்னு சொன்னிங்க, பர்னிஷ்ட் ரூம்தானே...? கட்டில் இருக்குதா...? பேன் இருக்குதா...? டாய்லெட்." "எல்லாம் இருக்கு. கவலையே வேண்டாம். நிர்வாக இயல் என்பது.” சுரேஷ்சிங், நிர்வாக இயலை மேற்கொண்டும் ஜவ்வுமிட்டாய் ஆக்கியபோது, பாட்டிலும், நாயரும் ஒருசேர எழுந்தார்கள். "எங்களுக்கு ஹாஸ்டல் வேண்டாம். கரோல்பாக்கில சொந்தக்காரங்க இருக்காங்க... ஹாஸ்டல்ல தங்க மாட்டோம். தங்கவே மாட்டோம்." கரேஷ்சிங், கோபப்படப் போனார். இதற்குள் இரண்டு இள வட்டங்கள் வந்தன. எடுத்த எடுப்பிலேயே பேசின. "சார். ஐ ஆம் மிஸ். முன்னி ஆப் ராஜஸ்தான்.” "சார் ஐ ஆம் சஞ்சய் தாமஸ். புரம் ஆந்திரா.” அந்த இருவரும், அறிமுகம் இல்லாதவர்கள் என்பதைக் காட்டும் வகையில், ஆளுக்கு ஒரு வரிசையில் உட்கார்ந்தார்கள். மீண்டும் சுரேஷ்சிங்... மீண்டும் நிர்வாக இயல்... "கேன்.என்.எஸ் மீண்டும் ராமையாவின் காதை உரசினார். "பாரு. ராமு. இந்தச் சின்னஞ்சிறுசுகள் நம்ம வெவல் பதவிக்கு வந்திருக்கிறதைப் பார்க்க வெட்கமா இருக்குது.” இந்தச் சமயத்தில், பயிற்சி அதிகாரிகள் மிஸஸ்.ஜோஷியை விட்டுவிட்டு, மிஸ். முன்னியை மொய்த்தார்கள். முட்டிக் கால்களோடு நின்றுவிட்ட அவளது கவுனை ஒப்புக்கும், கால்களை உண்மைக்குமாய்ப் பார்த்துவிட்டு, ஒவ்வொரு கிழமும் லேசாய் விசிவடித்தது. சுரேஷ்சிங்கோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல், நிர்வாக இயலை வாயால் பிடித்திழுத்தபோது