பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 க. சமுத்திரம் வலது பக்கம் கடைசி வரிசையில் இருந்த வர்மா எழுந்தார். டில்லிக்காரர். அதோட சண்டைக்காரர். இவரோடு சண்டை போட தயாராக இல்லாத அதிகாரிகள், இந்த வர்மாவை நான்காவது தடவையாக பயிற்சிக்கு அனுப்பியிருக்கிறார்கள். சுரேஷ்சிங்கைப் பேச வேண்டாம் என்று கையாட்டிவிட்டு, வர்மா இப்படிப் பேசினார். "நிர்வாகம் என்பது என்ன என்பது முக்கியமில்லை. எப்படி என்பதே முக்கியம். அந்த எப்படி என்பதிலும், இப்படியா அப்படியா என்பது முக்கியம். அதுகூட முக்கியமில்லை. இப்படி என்பது எப்படி, அப்படி என்பது எப்படி என்று அலசி ஆராய்ந்து சிந்தித்துச் சீர்தூக்கி." சுரேஷ்சிங், வாயடைத்துப் போனார். முன்னாள் அசிஸ்டெண்ட் புரொபசர் டபிள்யூ. கன்னா குறட்டை போட்டே து.ாங்கினார். மற்றவர்களோ, எவன் பேசினாலும் இப்படித்தான் பேகவான். இவனே பேசட்டும் என்பது மாதிரி கம்மா இருந்தார்கள். இந்த மெளனத்தை அங்கீகாரமாக எடுத்துக் கொண்ட எஸ்.ஆர். வர்மா, உத்வேகம் பெற்றார். வகுப்பறைக்கு முன்னால் வந்து சுரேஷ்சிங் முன்பக்கம் தனது முதுகைச் சார்த்தியபடியே நிர்வாக இயல் பற்றி, கெளண்டர் லெக்சர் கொடுத்தபோது - "டீ பிரேக். டி பிரேக்.” தேநீர் குடித்தபோது, மிஸ். முன்னியும், அவள் வயதுக்காரனான சஞ்சய் குமாரும், ஒருவருடன் ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். முதலில் தயங்கித் தயங்கிப் பேசி, பிறகு, தயங்காமல்பேசிக்கொண்டார்கள்.கே.என்.எஸ், கமென்ட் அடித்தார். ‘'வேணுமுன்னா பாருடா. ராமு. ரெண்டு பேரும் லவ் பண்ணப் போறாங்க பாரு. குட்டி நல்லாத்தாண்டா இருக்காள். சர்க்கார் செலவுல காதல் பண்ணப் போறாங்கப் பாரு...” "நீ ஒருத்தன். ஆக வேண்டியதைப் பார்க்காமல்.’